பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 73

‘கானும் பொறுத்துத்தான் பார்க்கிறேன், ஊரார் வம்பு அளக்கிறார்களே என்று. அப்போ, காதலுக்கு இடமில்லை. காதலே அடக்க முடியுமோ? முடியாது. வெட்கத்தை வெற்றி கொள்கிறது காதல்’

“காதல் இல்லாது போனல் அப்புறம் நான் ஏன் இந்த உல கில் உலவ வேண்டும்? கற்பும் பெண்மையும் அழிந்து விடுமே”

“ஊரார் என்ன வேண்டுமானலும் சொல்லட்டுமே! அதற் காக நீ ஏ ன் கவலைப் படுகிறாய்?’ s

“அதோ பார் ! அந்த மரக்கிளேயை. யானை தழை தின்ற கிளே. முறிந்து தொங்குகிறது. இருந்தாலும் அதிலே மறுபடியும் இலைகள் தளிர்க்கின்றன’’

‘தளிர்க்கின்றன. ஆனல் முதலில் இருந்ததுபோல் தளிர்க்க வில்லையே !’

‘அதே போல்தான் நானும்! அன்று ஆற்றின் கரையிலே அவன் என்ன செய்தான் ? யானே தழை தின்றதுபோல் தின்று விட்டான். எனது பெண்மையைக் களித்துவிட்டான். இன்னும் கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கிறது. ஒடிந்த கிளேபோல். கான் என்ன செய்வேன் ?’’

கெளவை அஞ்சின், காமம் எய்க்கும்; எள் அற விடினே, உள்ளது நானே : பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ காருடை ஒசியல் அற்றேகண்டிசின், தோழி 1-அவர் உண்ட என் நலனே.

-ஆலத்துார் கிழார்

46. மலையிலே நடந்த மண விழா!

ஆணுக்குப் பெண். பெண்ணுக்கு ஆண் ஒருவருக்கு மற்று ஒருவர் துணை. இத்துணையின்றேல் வாழ்வில் இன்பமில்லை. எனவே, ஒருவனுக்கு ஒருத்தி. ஒருத்திக்கு ஒருவன். இதுவே வாழ்வு. இந்த வாழ்க்கை ஒப்பந்தமே திருமணம்.

திருமணம் என்று சொன்னல்-அடாடா ! என்ன பாடு !