பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கு று ங் தொ ைக க்

என்ன பாடு எவ்வளவு ஆர்ப்பாட்டம் ! ஊரடைத்துப் பந்தல் 1 ஒரே வெளிச்சம் 1 மேள தாளம் ! ஆரவாரம் ஜனக்கூட்டம் ! வருவோர் போவோர் ! ஆயிரம் ஆயிரமாக ரூபாய் செலவு ! இவையெல்லாம் இன்றைய நாகரிகக் காட்சிகள் ! அன்பு? அது தான் தேடிப் பார்க்க,வேண்டிய ஒன்று!

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் முன்பு நடந்ததொரு வாழ்க்கை ஒப்பந்தம். மேள தாளம் இல்லை. மின்சார வெளிச்ச மில்லை. ஊரடைத்துப் பந்தல் இல்லை. பணச் செலவும் இல்லை. அவளும் காதலித்தாள். அவனும் காதலித்தான். இருவரும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்ய முன் வந்தனர்.

அந்த ஒப்பந்தத்துக்குச் சான்று கின்று முடித்து வைத்தாள் மற்றாெரு பெண். வாழ்க்கை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்தை எடுத்துச் சொல்கிருள். நீண்ட சொன்மாரி பொழிய வில்லை. சுருக்கமான பேச்சு. ஆழ்ந்த கருத்து!

“இந்த உலகத்திலே யாராவது பெரிய உதவி செய்தால் அதைப் போற்றுவது இயற்கை. ஆனல் அதிலே என்ன சிறப்பு இருக்கிறது? ஒன்றுமில்லை. சிறு உதவி செய்தாலும் போற்ற வேண்டும். அதுவே சிறப்பு!

‘இப்போது ஏற்றுக் கொள்கிருயே! உன் காதலி. அவள் உனக்கு இன்பம் தருகிருள். நீயும் அன்பு கொள்வாய். ஆதரிப் பாய். அழகு இருக்கிறது இளமை இருக்கிறது! எனவே நீயும் அதிலே மனம் ஈடுபடுவாய். அது சிறப்புத் தருவதாகாது. அழகும், இளமையும், இன்பமும் எவ்வளவு நாள் ? கொஞ்ச காலமே. இளமை கில்லாது. போய் விடும். முதுமை விரை வில் வரும். இளமையுடன் அழகும் போம். அந்தக் காலத்திலே நீ இவளைப் புறக்கணித்தல் ஆகாது. இளமையில் நமக்கு இன்பம் தந்தாளே என்று எண்ணி அன்புடன் இருப்பாயாக. அதுவே சிறப்புத் தரும்.

“அதோ பார் ! ஓங்கி வளர்ந்த மூங்கில். அந்த நிழலிலே படுத்துறங்கும் விலங்குகள். முற்றிய மூங்கில் இலையை அவை உண்பதில்லே! இளம் மூங்கில் குருத்துகளே உண்ணும். முற்றிய மூங்கில் இலே அவற்றிற்குப் பயன்தரா. எனவே, வேறு இலே