பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 77

“கட்டுக்கடங்காமல் திரிந்த காட்டு யானையை’ “அப்பாடா! எனக்குத் தூக்கி வாரிப்போட்டது” “பொறு! பதருதே! சொல்வதைக் கேள்’’ “குட்டிப் பாம்பு திண்டியதா? காட்டு யானை மிக வருந்தியது” ‘உம். அதுக்கும் உனக்கும் என்னப்பா சம்பந்தம்?’ ‘இருக்கு சொல்வதைக் கேள்.” ‘கட்டுக் கடங்காத காட்டுயானே நான்!” “சரி, குட்டிப் பாம்பு எது’ ‘அ ப் ப டி க் கேள்! கு ட் டி ப் பா ம் பு எது என்று சொல்லட்டுமா?’’

  • சொல்லு’ ‘அந்தக் குட்டிப் பாம்பு மினு மினு என்று அழகாயிருந்தது. தடவிக் கொடுத்தேன்!”

‘ஏனப்பா குட்டிப் பாம்பு என்று தெரிந்தும் அதைப் போய்த் தடவலாமா ?”

“தடவினேன? உடனே அது பல்லேத் திறந்து.............


‘ஆ’.........திறந்து..............?” “பட்டென்று மூடியது...” * அப்புறம்?’’

‘அப்புறம் என்ன? அவதி!”

“என்னப்பா புதிர் போடுகிறாய்! குட்டிப் பாம்பு என்கிறாய். என்ன வோ சொல்கிறாய்’’

பாம்பை நீக்கிப்பாரேன்’

“அடே! டே! இப்போ புரியுது குட்டி அதாவது இளமங்கை ஒருத்தியைக் கண்டு... ஆ’’

“ஆமாம் ஆமாம்!”

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளே கான யானை அணங்கியா அங்குஇளையள், முளே வாள் எயிற்றள், வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே.

-சத்திகாதஞர்