பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கு று ங் .ெ த ைக க்

49. எட்டி எட்டி பார்ப்பவர்க்கு எட்ட எட்டநிற்குமது’

அவன் இருப்பது ஒர் ஊர். அவள் இருப்பது மற்றாேர் ஊர். இருப்பினும் இரவு நேரத்திலே வருவான் அவன், தனது காதலியைக் காண்பதற்காக. கண்டு இன்பமாகப் பொழுது போக்குவதற்காக, இந்த விஷயம் வேறு எவருக்கும் தெரியாது, இரகசியம்!

ஒருநாள் என்ன ஆயிற்று? காவல்காரர்கள் ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலே அவனும் வக் தான். காவல்காரர்களேக் கண்டுவிட்டான். நல்லவேளே! அவர் கள் அவனைப் பார்க்கவில்லே. பார்த்து விட்டால் வம்பு. யார்? என்ன? எங்கே போகிறாய்?’ என்று கேட்பார்கள். எல்லாவற் றிற்கும் பதில் சொல்ல வேண்டும். மறுநாள் ஊர்ப்பொதுவில் நிறுத்தி விசாரிப்பார்கள். மானம் போய்விடும். இரகசியம் அம்பலமாகிவிடும்! எனவே, என்ன செய்தான்? மெல்ல கழுவி விட்டான். காதலியைப் பார்க்கலாம் என்ற ஆசையோடு வந்தான்! பாவம்!

இன்னெருநாள் வந்தான். இரவு நேரம். ஊர் அடங்கி விட்டது. நாய்கள் திரிந்தன தெருவிலே தூரத்திலே ஆள் வரும் அரவம் கேட்ட உடனே அவை குரைத்தன.

“என்னடா இது? நாய் குரைக்கிறதே!’ என்று எண்ணி அவன் திரும்பி விட்டான். திரும்பாவிட்டால் என்ன? காய்கள் விடாமல் குறைக்கும். ஊரார் விழித்துக் கொள்வார்கள். இரகசி யம் வெளியாகும் அல்லவா! எனவே திரும்பிவிட்டான். அன் றைய தினமும் அவளைப் பார்க்க முடியவில்லை.

இன்னொருநாள் வந்தான். காவல்காரர்கள் கண்ணில் படா மல் த்ப்பி விட்டான். காய்களும் குரைக்கவில்லை. அவளது விட் டுக்கு அருகே வந்துவிட்ட்ான். நிலவு வெளிப்பட்டு விட்டது. நிலவு வெளிப்பட்டால் அவள் வெளிவரமாட்டாள். வெளிச்ச மனக இருக்கும் அல்லவா! எனவே, திரும்பிப் போனன்.