பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 81

51. அணங்கும் அஷ்டமி நிலவும்

மலைநாட்டு இளைஞன் ஒருவன் செல்வன். ஒருத்தியைக் கண்டான். காதல் கொண்டான். இன்பமாக இருந்தான். பிரிந்து சென்றான். அதுமுதல் அதே கினேவு. அவளேயே எண்ணி எண்ணி இருந்தான். கண்டான் தோழன்.

‘ஏன், உனக்கு என்ன வந்துவிட்டது ?” ‘ஒன்று மில்லையே!” ‘ஒன்றுமில்லையா? எதையோ எண்ணி எண்ணி ஏங்கு கிருயே! என்ன ?”

‘கண்பா 1 அன்பா ! உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் நான் சொல்லப் போகிறேன்?

‘காட்டு யானேயைச் சிறைப்படுத்தியதுபோல் என்னேச் சிறை செய்து கொண்டு போய்விட்டாளடா”

‘யாரடா ? யார் அவள் ?’’ ‘நீலக் கடலிலே தோன்றிய அஷ்டமி சந்திரன் போன்ற பெண் ஒருத்தி’’

“அப்படியா ?” “ஆமாம் ஆமாம் ! கன்னங் கரிய கூந்தல், நிலவு பேன்ற நெற்றி ! ஆகா ! என்ன அழகு 1 என்ன அழகு !’

எலுவ ! சிருஅர் ஏமுறு நண்ப ! புலவர் தோழ கேளாய் அத்தை : மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசு வெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

-கோப்பெருஞ் சோழன்

52  ;

“உனது அறிவு என்ன? படிப்பு என்ன? பெருமை என்ன? இப்படிப்பட்ட நீ, ஒரு பெண்ணே கினைத்து மனம் அலேயலாமா?’ என்று கேட்டான் நண்பன்.

6