பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கு று ங் .ெ தா ைக க்

‘பார்த்ததும் உன் காதலன் நினைவு வந்துவிட்டது. அதானே !’

ஆம் !’

‘உன்னைக் கலியாணம் செய்து கொள்வதற்காகத்தானே ! அவர் வெளியூர் போயிருக்கிறார். அதனால் உனக்கு நல்லது தானே !”

“நல்லதுத்ான். இருப்பினும் அவரது பிரிவு துன்பம் தரு கிறதே. பிரிவு இல்லாதிருந்தால் நன்றாயிருக்கும்” என்றாள் அவள்.

அம்ம வாழி - தோழி ! - கம்மொடு பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல - குறும் பொறைத் தடைஇய நெடுங் தாள் வேங்கைப் பூவுடை அலங்கு சினே புலம்பத் தாக்கிக் கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, நிலம் கொள் பாம்பின், இழிதரும் விலங்கு மலே நாடனெடு கலந்த நட்பே.

-கோவேங்கைப் பெருங்கதவன்

55. மதமும் மன்மதமும்

“நீ என்ன இப்படிக் காமப் பித்துப் பிடித்து அலைகிறாய்?” என்றான் நண்பன்.

‘ஏய், என்னவோ, காமம் காமம் என்று உலகத்தார் சொல் கிறார்கள். காமம் என்பது என்னவாம் ?”

“அது ஒரு நோய்”

‘அல்ல, அல்ல. நோயுமல்ல’’

‘அது ஒரு புது வியாதி”

“அதுவுமல்ல’’

“பித்தம் தலைக்கு ஏறுகிறதே! அந்த மாதிரி ஏறி இறங்கும் ஒன்று”

சிச் சீ ! அவையெல்லாமில்லை’

‘பின் என்னவாம் ?’’