பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 85

‘உடம்பிலேயே ஊறியிருக்கிற ஒன்று காமம். அதற்கு உரிய வர்களைக் கண்ட உடனே அது வெளியாகும். தழை யுண்ட யானைக்கு மதம் வெளிப்படுவது போல. வேறு ஒன்றுமில்லை’ என்றான் அவன். ‘காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்றே ; நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே; யானே குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

-மிளைப்பெருங் கந்தன்

56. நிசியும் நொச்சியும்

‘ராத்திரி முழுவதும் கண் கொட்டவில்லை” என்றாள் அவள்.

‘ஏன் 2”

‘தூக்கமே வரவில்லை’

‘ஊரடங்கித் தூங்கிற்றே !’

“ஆமாம். நமது வீட்டுக்கு அருகே உள்ள நொச்சி மரத்தி லிருந்து மலர்கள் பொத்துப் பொத் தென விழுந்து கொண்டே யிருந்தன’’

‘சரிதான். இப்பொழுது புரிந்தது. வந்தானுே, வந்தானே என்று எழுந்து எழுந்து பார்த்துக் கொண்டிருந்தாயோ !”

‘வரவே இல்லையே!”

அவளது காதலன் வேலிக்கு அருகே நின்று கொண்டிருக் தான். அவன் கேட்க வேண்டும் என்பதற்காக மேற்கண்டவாறு கூறினுள் அவள்.

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே - எம் இல் அயலது ஏழில் உம்பர், மயில் அடி இலேய ம்ாக் குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு கணி கேட்டே.

-கொல்லன் அழிசி