பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கு று ங் தொ ைக க்

57. கள்ளியின் உள்ளம்

‘ஏனடி தோழி, நீதான் சொன்னல் என்ன ?”

    • ar 6ffl 2**

“அவரிடம்’

‘உன் காதலரிடமா?’’

“ஆமாம்!”

“என்ன சொல்ல வேண்டுமென் கிறாய் ?”

‘யானையும், புலியும், செந்நாயும் திரிகின்ற இந்த மலைச் சாரலிலே தனியாக ஏன் இந்த இரவு நேரத்திலே வருகிறார்?’’

‘வரவேண்டாம் என்று சொல்லவா ?”

“ஆமாம்!”

‘பிறகு எங்கே வர ? என்று கேட்டால்......”

‘அம்மாதான் தினைப்புனத்தில் காவல் இருக்கச் சொல்வி விட்டாளே!’

‘அப்போ! அங்கே வரச் சொல்லவா?’’

“ஆமாம்” ‘வளை வாய்ச் சிறு கிளி விளை தினக் கடீஇயர் செல்க’ என்றாேளே, அன்னை என, நீ சொல்லின் எவனே?-தோழி-கொல்லே நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த குறுங் கை இரும் புலிக் கொலே வல் ஏற்றை பைங் கட் செங்காய் படுபதம் பார்க்கும் ஆர் இருள் நடு நாள் வருதி, சாரல் காட, வாரலோ எனவே.

-மதுரைப் பெருங்கொல்லன்

58. சுழலுதே! மனம்!

கண்டான். காதல் கொண்டான். அவளும் இணங்கிள்ை. இருவரும் இன்பம் துய்த்தனர்.

‘நேரமாயிற்று; வருகிறேன்’ என்றாள். போய்விட்டாள்.