பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$94 குறுங் தொ ைக க்

அவல நெஞ்சமொடு உசாவாக் கவலை மாக்கட்டு - இப் பேதை ஊரே.

-வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

67. அன்றிலின் இன்பமும் அணங்கின் துன்பமும்

இரவு நேரம். தூக்கம் வரவில்லே அவளுக்கு. படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிருள். குளிர் நடுக்குகிறது. வாடைக் காற்று வீசுகிறது. காதலன் பிடியிலே - கதகதப்பிலே - இன்பமா யிருக்க வேண்டிய சமயம். ஆனல் அவனே வரவில்லை. அரு கிலே உள்ள மரம் ஒன்றிலே அன்றில் பறவைகள் இரண்டு அமர்ந்திருக்கின்றன. ஜோடியாக இருக்கின்றன. ஆண் அன் றில் பெண் அன்றிலுடன் கொஞ்சுகிறது ; குலவுகிறது.

அதைக் கேட்கக் கேட்க இவளுக்குத் துன்பமுண்டாகிறது; மனம் அமைதியின்றி இருக்கிறது. தவிக்கிருள்.

விரைவிலே அவர் வருவார். கொஞ்சம் பொறுத்திரு’ என்றாள் தோழி.

“காதலர் இன்புற்றிருக்க இதுதானே சமயம். இரவு நேரம் குளிர்காலம். வாடை வீசுகிறது. இப்பொழுது வராதவர் இனி எப்பொழுது வரப் போகிறார் ?”

‘அப்படி மனம் உடையலாமா ?”

“அதோ அந்த அன்றில் . ஆணும் பெண்ணுமாக எப்படிக் கொஞ்சி மகிழ்கிறது ! அந்த பாக்கியம் கூட எனக்கில்லையே!”

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் கையற நரலும் கள்ளென் யாமத்துப் பெருங் தண் வாடையும் வாரார்; இஃதோ - தோழி ! - கம் காதலர் வரவே ?

-மதுரை மருதன் இளநாகன்