பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கு று ங் .ெ தா ைக க்

  • அடி பெண்ணே 1’ என்று அழைத்தாள். ஏன்’ என்று கேட்கவில்லே அவள். காரணம் என்ன ? உடனே பதில் கொடுத் தால் ‘இவள் தூங்காத காரணம் என்ன” என்று தாய் யோசிக்கக் கூடும் அல்லவா !

இரண்டு மூன்று முறை அழைத்தாள் தாய். ‘ஏன் அம்மா !” என்று கேட்டுக் கொண்டே எழுந்தாள். “அந்த விசிறியை எடு” என்றாள். பிறகு நெடு நேரம் தாய் துரங்கவில்லை.

காதலனேக் காண்பது எப்படி ? கண்ணிர் விட்டுக் கலங்கிய வண்ணம் படுக்கையில் படுத்தாள் அவள்.

அவனே, மார்பிலே சந்தனமும் கழுத்திலே மலர் மாலேயும் வாசனை வீசக் காத்திருந்தான். ‘வருவாள் வருவாள்’ என்று வருவது எங்கே?

நீண்ட நேரமாயிற்று. ‘ஏமாற்றி விட்டாள் திருடி’ என்று சபித்துக் கொண்டே சென்றான்.

மறு நாள் தோழியைக் கண்டாள் அவள். அந்த நேரத்திலே அவனும் வந்து கின்று கொண்டிருந்தான். ‘நேற்று இரவு ஏன் வர வில்லை ?’ என்று கேட்பவன் போல,

அதற்கு சமாதானம் சொல்ல வேண்டுமே ! நேற்று நடந்தது இப்படி” என்று த்ோழியிடம் கூறிள்ை. அது அவன் காதிலும் விழுமல்லவா! சரிதான். அவள் மீது வஞ்சனேயில்லே’ என்று மனம் தேறுவான் அல்லவா? அதற்காக.

பொழுதும் எல்லின்று; பெயலும் ஒவாது. கழுது கண் பனிப்ப வீசும்; அதன் தலைப் புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, “அன்ன !’ என்னும், அன்னேயும் : அன்னே ! என் மலைந்தனன்கொல் தானே - தன் மலை ஆரம் நாறும் மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனனே ?

-நக்கீரர்