பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நோய் களைவார் எவரும் இல்லை :

என்னைப் பிறர் மணந்து செல்ல அவன் பார்த்துக் கொண்டிரான்; வந்தாரை விரட்டிவிட்டுத் தானே மணந்து கொள்வன்; ஆதலின் வரைவு பேசி வந்துள்ள வெளியாரி முயற்சி விளும்” என்றெல்லாம் கூறி, உள் உறுதியுடையாள் போல் காட்டிக்கொள்ளினும், அவ்வாறும் நிகழ்ந்துவிடுமோ” என்ற அச்சம் அவள் உள்ளத்தையும் பற்றி வாட்டியது. புறத் தோற்றம், அவள் அது குறித்துச் சிறிதும் கவலே கொண் டிலள்; இதற்கெல்லாம் அஞ்சுவாள் அவள் அல்லள் எனக் காட்டினும் அவள் அகம், அச்செய்தி கேட்டு நடுங்கிவிட்டது: அக்கவலே அவ்வுள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவ் வுள்நோய், அவள் உடல் எலும்புகளை மெல்ல மெல்ல உருக்கத் தலைப்பட்டுவிட்டது. அந்நிலை நீண்டால், அவள் உயிர் வாழாது. ஆகவே, உடனடியாக அவள் அவனே மணந்துகொள்ளுதல் வேண்டும். அது எவ்வளவு விரைவில் முடிகிறதோ அவ்வளவும் நன்று என அறிந்து வருந்தினள்.

இந்நிலையை அவனுக்கு அறிவித்தல்வேண்டும்; ஆளுல் அது அவளால் இயலாது; தாய், அவளைப் புறத்தே போக விடாது விழிப்பாய் இருந்து காத்து வருகிருள். அவள் காவலைக் கடந்துபோவதும் இயலும் என்றாலும், காதல் நோயால் தனக்குற்ற கேட்டினத் தன் காதலனுக்குத் தானே எடுத்துரைத்தல் அவளால் இயலாது; அவ்வாற்றல் அவள் பெண்மைக்கு இல்லை. எடுத்துக்கூறின் பெண்மைக்கு இழுக்காம். உடம்பும் உயிரும் வாடியக்காலும், என்னுற்றன கொல் இவையெனின் அல்லது. கிழவோற சேர்தல் கிழத் திக்கு இல்லை” எனப் பெரியோர் விதித்த விதியைப் பேணிக்

ஆழமான குளம் மா. நீர்நாய்; பட்டாஅங்கு - அகப்பட்டது போல்; இது - திருமணம் பேசிவந்த நிகழ்ச்சி, எவனே.என்ன பயன்தரும் பயன்தராது; நொதுமலர்- அயலார். -