பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

i

அவள் உள்ளம் துணிந்துவிட்டது; அஞல் அவள் பெண்மை, தன் காதல் நோயைக் தானே உரைக்க நாணிற்று. அதனல், தன் பெண்பையும் கெடாது, தன் எண்னமும் நிறைவேறவல்ல ஒரு வழியைக் கண்டாள்; தன் சொல் கேட்கும் தொலைவில், தோழி வந்து நிற்கும் காலத்தை எதிர்நோக்கியிருந்தாள். அவளும் வந்தாள். உடனே அைைளப் பாராத வள்போல், ஆனுல் அவள் காதுகளில் படு மாறு, “காதலனே அன்று கண்டதால், என் அகத்தில் குடி கொண்ட க தல்நோய், இன்று என் உள்ஸ்ரீப்புக்களை அழிக் குமளவு உரம் பெற்று விட்டது. அன்நோய் தீர்க்கும் ஆற்றல் என் திருமணம் ஒன்றிற்கே உண்டு. ஆல்ை,அதற்கும் இப்போது கேடு வந்துளது. அதை உணர்ந்து விரைந்து வந்து வரைந்து கொள்ள அவனும் முன் வந்திலன். வந்துள்ள கேட்டினை அவனுக்கு உர்ைத்து வருவோம் என்றால், அதை, என் பெண்மை முன் நின்று தடை செய்கிறது. என்கனப் பற்றி வருந்தும் இ காம் தே யின் கொடுமை கண்டு. அதைப் போக கித் துணைபுரிவாரையும் பெற்றிலேன்; அந்தோ! யான் என் செய்வேன்! என் னைப்பற்றி வருத்தும் இக்காம நோய் என்னே விட்டு எளிதில் போகாது. அதைப் போக்குவாரும்

பகுப்பை மேட்டினைக் கிளறி, ஆங்குக் கிடைக்கும் புழுப் பூச்சிகளைக் கொத்தித் தின்னும் கோழிகளுக்கிடையே சில சமயம் சண்டை உண்டாகிவிடும்; அக்குப்பைக் கோழிகளின் சண்டை, சேரிக் கோழிகளின் சண்டைபோல் சிறப்பிக்கப் படுவதில்லை. போருக்கு என அவற்றைப் பேணிவளர்ப்ப வரும் இல்லை; அவற்றினிடையே போரை உண்டாக்குவாரும் இல்லை; அவற்றின் சண்டையைச் சிறிது பொழுது நின்று கண்டு மகிழ்வாரும் இல்லை; இறுதியில் அச்சண்டையை இடைநின்று போக்குவாரும் இவலை. அவை தாமே போt தொடங்கிப், பிறர் கண்ணில் படாவாறு தாமே போரிட்டுத் தம் ஆற்றல் இழந்ததும், பிறர் தலையீடில்லாமல் தாமே ஓய்ந்து போகும். அக்குப்பைக் கோழிகளின் சண்டையைப்