பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 3.

ப்ோல், என் காதல் நோயும், அன்று, தானே வந்து பற்றிக் கொண்டதுபோல், இன்று அது, என்னைத் தானே கைவிட் டுப் போக வேண்டும் போலும் என் அகப்புற உறுப்புக்களே யெல்லாம் அறவே அழித்து, இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை எனக் கண்டு, அதனுல் அது தன் அழிக்கும் ஆற்றல் இழந்து தானே அழிய வேண்டுமே யல்லது, அதை அழிப்ப வர் அதை அழித்து, அதனல் என்னைக் காப்பவர், எவரும் இல் ைபோலும்” எனக் கூறி வருந்தினுள்.

கண்தர வந்த காம ஒள்ளி என்பு உற கலியினும், அவரொடு பேணிச் சென்று காம் முயங்கற்கு அருங்காட்சியமே. வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; உய்த்தனர் விடாஅர், பிரித்து இடைகளையார் குப்பைக் கோழித் தனிப்போர் போல விளிவாங்கு விளியி னல்லது

களைவோர் இலை, யான் உற்ற நோயே” .

அவளுேடு சென்றுவிடு; அதுவே சரி

அப்பெண் கூறிய ைகேட்ட தோழி, இவள் கூறுவன அனைத்தும் என்ன நோக்கி; வேற்று வரைவு வரக் கண்டு. வெளித் தோற்றத்திற்குக் கலங்காதவள்போல் தோன்றினும் உண்மையில், என்னைப் போல்வே இவளும் கலங்குகிருள். தன் காதலப் பெற்றாேர்க்கு உணர்த்தியோ, பிறவழியால்

குறுந்தொகை 805. குப்பைக் கோழியாம்.

கண்தர-கண்கள் காதலனைக் கண்டதால் வந்த, கள்ளரி. கொடிய நோய்; என்பு-எலும்பு உற-நன்றாக, நலியினும்வருந்தினும், முயங்கற்கு. கூடுதற்கு; அருங் காட்சி.அருமை யாம்; அஞர்.துன்பம்; உய்த்தனர்.விடார்-செலுத்தி விடப் பெருமல்; விளிவாங்கு-தானே அழியும் பொழுது .