பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

θα

தன் முடிவைக் கூறி அவளைக் கொண்டு செல்லுமாறு வேன் டிக் கொள்ள, அவனத் தேடிச் சென்றாள்; அவனைக் கண் டாள்; வீட்டு நிலையை விளங்கக் கூறித், தான்கொண்ட முடி வையும், அதற்கு அப்பெண் இசைந்ததையும் அறிவித்து, * அன்ப; இவளை இன்றே அழைத்துச் செல்க’ என வேண்டிக் கொண்டாள்,

இளைஞன், தோழி கூறிய அனைத்தையும் அமைதியாக இருந்து கேட்டான். அந்நிலையில் அது வல்லது வேறு வழியில்லை என்பதை அவனும் உணர்ந்தான். அவ்வாறே உடன் கொண்டு செல்லவும் துணிந்தான். ஆனல் சிறிது அஞ்சின்ை. ‘கடந்து .ெ ச ல் ல வே ண் டி ய காட்டு வழி கொடுமை மிக்கது. ஆடவரும் அவ்வழி செல்ல அஞ்சுவர்; அத்தகைய வழியில், வீட்டை விட்டு வெளியே வந்து பழகாத இவளை-தாய் அருகில் கிடந்து உறங்கும் போதும் அஞ்சும் அத்துணை மெல்லியலாளாகிய இவளைஎவ்வாறு அழைத்துச் செல்வது? ஆங்கு வந்து தளர்ந்து வருத்துவளே! வருந்தும் அவள் நிலைகண்டு யானும் வருந்து வதல்லது அவள் துயர்தீர்த்தல் இயலாதே” என்ற அச்சம் அவன் உள்ளத்தை அலைத்தது; அதல்ை உடன் கொண்டு

செல்லச் சிறிது தயங்கினன.

இளைஞன் மனநிலையைத் தோழி உணர்ந்து கொண் டாள. உடனே அவனை அணுகி, “அன்பl உடல் இன்பத் தினும் சிறந்தது உயிர் இன்பம்; உடலுக்கு இன்பம் தரும் பொருளினும், உயிருக்கு இன்பம் தரும் பொருளே சாலச் சிறந்தது. உடலுக்கு இன்பம் தரும் ஒரு பொருள், உயிருக்குத் துன்பம் தருமாயின் அப்பொருளை அனைவரும் வெறுப்பர். அது உடலுக்கு இன்பம் தருவதற்காக அதைப் பாராட்டார்; அதைப் போலவே, உயிருக்கு இன்பம் தரும் ஒரு பொருள் உடலுக்குத் துன்பம் தருமேனும், அதையே