பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அனைவரும் விரும்புவர்; அது தருவது ஒன்றைக் கொண்டே அதை எவரும் வெறுக்கார். மேலும் அன்ப! உயிா இன்பத்தில் திளைத்திருக்குங்கால் தன்னை வருந்தும் துன் பத்தை உடல் பொருட்படுத்தாது. உயிர் இன்பத்தில் உடல், அத்துன்பத்தை மறந்துவிடும்; உயிர் துன்பத்தில் உழலும்போது, உடல் தன்னே வந்து அடையும் எவ்வளவு பெரிய இன்பத்தையும் இன்பமாகக் கொள்ளாது; உயிரி படும் துனபத்தில் உடல் அப்பேரின் பத்தை மறந்துவிடும், அன்ப! இவ்வுண்மைகளை நன்கு அறிந்தவன் நீ; எம்.வீடு வளத்தால் நிறைந்துளது; நாங்கள் வேண்டியதை அளிக் கிறது; தாயும் தந்தையும் தம் அன்பு முழுவதையும் எம்மீது சொரிகின்றனர்; ஆனுல், நாங்கள் விரும்பும் ஒருவருக்கு எம்மை மணம் செய்து தரும் மனம் அவர்களுக்கு இல்லை. அதஞல் வளம் கொழி கும் எம் வீட்டு வாழ்வு எமக்கு வெறுத்துவிட்டது. காடு கொடுமை மிக்கது என்பது உண்மை; என்றாலும், அது எமக்கு வாழ்வளிக்கும் எம் காதல ைேடு சென்று அவனே மணந்து வாழும் மாண்பு நிறை வாழ் வைப் பெறத் துணைபுரிகிறது. தன் கொடுமையால் கிறிது துயர்தருகே னும், அது காதலனேடு கலந்து வாழும் கவின் மிக்க வாழ்வை அளிப்பதால், எம் கருத்திற்குப் பேரின்பப் பொருளாய் மாறிக் காட்சி அளிக்கிறது. ஆகவே, அக்காட்டு வாழ்வையே விரும்புகிறது எம் உள்ளம். அன்ப! நீரில் வளர்வது குவகள; தன் தாளில் நீர் நிறைந்திருக்க மலர்ந்த குவளை மலர், வறண்ட மேல்காற்று வீசுவதால் வாடிவிடுவ தில்லை. கோடைக் காற்றின் கொடுமையைத் தாளில் தேங்கி நிற்கும் தண்ணீர் மாற்றிவிடும்; அதுபோல் உன் அன்பால் உயிர் வாழ்பவள் இவள்; அவள் பால் பேரன்புடிைய நீ, உடன் இருப்பின், செல்லும் வழியின் கொடுமை இவளை வருத்தாது, நீ காட்டும் பேரன்பு, காட்டின் கொடுமையை மாற்றிவிடும்; காதலன் உடன்வரின் காடும் களிப்பூட்டும்; ஆகவே, அன்ப! காட்டின் கொடுமை கண்டு அஞ்சாது, இவளை உடனழைத்துச் செல்வாயாக’ எனப் பலப் பல கூறி வேண்டிக் கொண்டாள்,