பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

வருகிருள் இவள். பெரிய மனேயையும், பெற்ற தாய் தந்தை யையும், பேணி வளர்த்த செவிலியையும், உடன் வளர்ந்த என்னேயும் துறந்து வருகிருள்; இனி இவளுக்கு நீ அல்லது வேறு தணேஇல்லை. அன்ப! அன்பு காட்டி அணைக்கும் தாய், கோல்கொண்டு தாக்கித் துன்புறுத்தும் போதும், குழந்தை, அம்மா! அம்மா! எனக் கூவி அவளையே சுற்றிச் சுற்றிவரும். அதுபோல், இனி நீ இவளுக்கு இன்பமே தரினும், துன்பமே தரினும், உனனேவிட்டு இமைப் பொழுதும் பிரியாள்; உன் காலடியிலேயே வீழ்ந்து கிடப்பாள்; இன்பத்திலும், துன் பத்திலும் துணையாவான் நீ ஒருவனே, ஆகவே, இவளை இமைப் பொழுதும் கைவிடாது காப்பாற்றுவாயாக. அன்ப! மற்றும் ஒன்று. பெருமளவில் துணை புரிவார் ஒருவ ரைப் போற்றி வழிபடாதவர் உலகில் எவரும் இரrர்; அவரை, அப்போது போற்றுதல், அரிய செயலும் ஆகாது. ஆனல், இவரால் எவ்விதப் பயனும் இல்லை; படி ன் அற்றவர் இவர் என்பதை அறிந்தும், அவர்க்கு வேண்டுவன அளித்து விரும்பிப் பேணுவதே பெரிது. அந்நற்பெரும் தொண்டினே எல்லோரிடததும் எதிர் பார்த்தல் இயலாது. செயற்கரிய செய்யும் பெரியோர் சிலரிடத்து மடடுமே அதைக் காண லாப ; அன்ப! இவள் இன்று பேரின் பப் பொருளாய் விளங்கு கிருள்; இன்பத்தை வாரி வழங்கிகு கிருள் இன்று. அதனல், இன்று அவள்பால் அன்பு காட்டுவதில் வியப்பிலலை. இன்பக் களஞ்சியமாய் இன்று காட்சி அளிககும் இவள், தன் இளமை கழிந்து, முதுமையடைந்து அழகிழந்து நிற்கும் அந்நிலை யிலும இவளேக் கைவிடுதல் கூடாது. அந்நிலையிலும் இவளைப் போற்றிக் காப்பது உன் கடன்; இவளே, இன றேபோல் என்றும் அன்பு காட்டி ஆதரிக்க வேண்டுகிறேன்” என வணங்கி வேண்டிக் கொண்டு வழி அனுப்பினுள் என்னே அத் தோழி அன்பு!

“தாய் உடன்று அலைக்கும் காலயும், வாய்விட்டு

அன்ன..! என்னும் குழவி போல,

இன்னு செயினும், இனிது தலைஅளிப்பினும்