பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

z

நின்வரைப்பினள் என்தோழி; தன்னுறு விழுமம் ளைஞரோ இலளே."a

பெருநன்று ஆற்றின் பேணுரும் உளரே, ஒருகன்று உடையளாயினும், புரிமாண்டு புலவிதீர அளிமதி............ நன்மலைநாட கின்னலது இலளே.’ b.

செல்லும் வழி கொடிது; இனிச் செல்லாதே.

“இன்பத்திலும் துன்பத்திலும் இவளுக்கு நீயே துணை: இடரினும் தளரினும் இவளேக் காத்தல் உன் கடன்’ என இளைஞனுக்கு அறிவுரை கூறுவாள்போல், அவ்வாறு காக்கு மாறு வேண்டிக் கொண்டு, தோழி விடைபெற்றுக் கொண் டாள். நம்பியும் நங்கையும் வாயிலைக் கடந்து வெளி யேறினர். காதலிக்குக் காட்டின் கொடுமை தோன்றா வாறு, ஆங்காங்கு காணலாம் இயற்கைக் காட்சிகளைக் காட்டியும், இனிக்கும் சதை பல கூறியும் மெல்ல அழைத்துச் சென்றான் இளைஞன். இருவரும், இடையிடையே மரநிழல் காணின் இருந்து இளைப்பாறியும், மணல் மேடு காணின் மகிழ்ந்து சிறிது விளையாடியும், நெல்லி போலும் நல்ல கனிகளைத் தின்றும், நறுநீர்ச் சுனைகளில் நீர் பருகியும் மகிழ்ந்து சென்று கொண்டிருந்தனர்.

a குறுந்தொகை: 397. அம்மூவர்ை. உடன்று-சினந்து அலைக்கும்-அடித்துத் துன்புறுத்தும்: வாய்விட்டு-வாய் திறந்து; அன்ன-அம்மா! தலைஅளிப்பினும். காப்பாற்றினாலும் நின்வரைப்பினள்.உன்னல் காப்பாற்றப் பட வேண்டியவள உறு-மிகக; விழுமம்.துன்பம்; களைஞர்போக்குவார். -

b குறுந்தொகை: 115. கபிலர். நன்று.நன்மை, ஆற்றின்..செய்தால்; உளரே -ஏகாரம் வின; எதாமறைப் பொருளில் வந்துளது. ஒரு நன்று-சிறி தளவான நன்மை புரிமாண்டு-அன்புகாட்டி, புலவித்ர. துன்பம் நீங்க: ஆளிமதி. காப்பாற்றுவாயாக,