பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

றுாருள் புகுந்து விட்டமையால், அவர்களே ஏதும் செய்யமாட்டாது வறிதே மீளுங்கால் எழுப்பும் அவர் பறை யொலி, எம் ஊர் எல்லையில், எம் ஊரைச் சூழ உள்ள காவற். காட்டிற்கு அணித்தாக அதோ ஒலிப்பது நினக்குக் கேட்டி லதோ அவ்வாறலைகள்வர் அண்மையில் இருக்கும் இந் நிலையில், இரவில், இடையூறு மிகுந்த இவ்வழியில் இனிப் போவது பொருந்தாது; இது உங்கள் ஊர்; இரவை ஈண்டுக் கழித்து, இனிது செல்வீராக’ எனக் கூறி, இருவரையும் அழைத்துச் சென்றனர்.

எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்! செல்லா தீமோ, சிறுபிடி துணையே! - வேற்றுமுனை வெம்மையின் சாத்துவந்து இறுத் தென வளை அணி நெடுவேல் ஏந்தி மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே,” ,

காட்டைக் கடக்க எங்ஙனம் கற்றனள்!

இவ்வாறு இருந்தும், இளைப்பாறியும், ஏற்ற இடங்களில் இரவைக் கழித்தும் இருவரும் இளைஞன் ஊர் அடைந்து, அவன் மனே புகுந்து மகிழ்ந்தனர். நிற்க, பொழுது புலர் தந்து மகள் உறங்கும் இடத்தில் அவள் இல்லை; அவள் படுக்கை வறிதே இருப்பது கண்டு கலங்கிளுள் தாய்; உடனே, தன் மகளே உறக்கத்திலும் பிரியாது பழகும் அவள் உயிர்த் தோழியை அழைத்து உசாவிள்ை. மகள், யாரோ ஒர் இளைஞன் பின் ஓடிவிட்டாள் என அறிந்து பெருந்துயர் உற்றாள் அத்தாய். மகள் பிரிவு மாற்றாெளுத் துயர் அளித்தது. பெற்ற தாயும் பெரிய சுற்றமும், மனேயும்,

2 குறுந்தொகை 390. உறையூர் முதுகொற்றஞர் எல்.ஞாயிறு: எல்லின்று-ஒளிஇழந்தான்; பாடு.ஒலி; செல்லா திம்-போகாதீர்கள்: பிடி-பிடியான போன்றவள்; 0வற்றுமுனை.போர்க்களம், வெம்மையின்-பகைமைபோல; சாத்து.வணிகர் கூட்டம்; இறுத்தெண- வந்து தங்கிற்றாக; மிளை-காவற்காடு; தண்ணுமை-பறை.