பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்று உன்பது இழிவே யாயினும் ஏற்கும் தொழிலுடிை பார் இயல்பால், அதுவும் உயர்ந்ததாகிவிடும் என்பதைக் காட்டுகிறது குறுந் தொகை, ஏற்பது என்றால், எங்கும் சென்று ஏற்பது, எவரிடத்தும் சென்று ஏற்பது, எதையும் ஏற்பது என்று எண்ணுயில், உயர்ந்த ஒழுக்கம் உடையாரி டத்து மட்டுமே ஏற்பது, நெய் கலந்து ஆக்கிய செந்நெல் சோற்றையே ஏற்பது எனும் உறுதியுடையார் அக்கால ஏற் பவர். அவர் இயல்பறிந் திருந்தமையால், அவர் வயிருர உண்பதற்கு வேண்டும் உணவு அனைத்தும், அவர் பல மனை ஏறி இறங்க வேண்டாவாறு ஒரே வீட்டாரே அளிக்கும் உயர்ந்த உள்ளம் உடையவர் அக்கால இடுவோர் என்ற உண்மைகளை ஓரிற்பிச்சை என்ற உயர்ந்த தொடரால் உணர்த்திய விழுச் சிறப்பால், ஓரிற்பிச்சையார் (செ. 277) என்ற ஒண் பெயர் பெற்றார் ஒருவர். அவரையும் அது போலும் சொற்றாெடர்களையே ஆண்டு, கங் கல்வெள் ளத்தார் (செ. 387), குறியிறையார் (394), கோவேங்கைப் பெருங்கதழ்வர் (செ. 134), நெடுவெண்நிலவிஞர் (செ. 47), பதடிவைகலார் (செ. 388) என்பனபோலும் அழகிய பெயர் களைப் பூண்ட புலவர்களே நாம் அறியத் துணை புரிவதும் குறுந்தொகையே. நிற்க, -

ஒருவனும், ஒருத்தியும் கண்டு, காதல் கொண்டு. மணந்து, மகனயற வாழ்வு நடாத்தும் மாண்புகளை விளக்கும் அகப் பாடல்களைப் பாடிய பழந் தமிழ்ப் புலவர் கள், அவ்வாழ்க்கை முறையினை காதலனும், காதலியும் காண்பது முதலாக, அவர்தம் மகாயற வாழ்வின் முடிவு நிலை காறும் உள்ள நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பாடி குரல்லர்; அவ்வாழ்க்கை நெறியில் தாம் விரும்பும் ஒவ்வொரு நிகழ்ச்சியையே தம் பாடல் பொருளாகக் கொண்டு தனிப் பாடல்களாகவே பாடிச் சென்றனர்; ஒருவரி, அவ்விருவரும் முதன் முதலாகக் கண்ட நில்ையப்_ப்ாடற் பொருள்ாக்கு வார்; மற்?ருகுவர், திருமண நிகழ்ச்சியைப் பாடி மகிழ்வார்.

ஆல்ை, அவருக்குப் பின்வந்த புலவர்கள், அவ்வாறு தனித்தனியே பாடி மகிழ்வதை விடுத்து, அந்நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பாடிக் கோவையார் என்ற புதிய இலக்