பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

விட்டு வெளியேறியதற்கு மகள் வருந்தாள்; அது அவளே விரும்பி மேற்கொண்டது. ஆளுல், விரும்பிச் சென்றாளேனும் வழியின் கொடுமையினே அவளால் தாங்கிக் கொள்வது இயலாது. மலை வழியில் கிடக்கும் கற்கள் அவள் கால்களை உறுத்தி வருத்தும். தண்ணீர் வேட்கை அவட்குத் தளர்ச்சி அளிக்கும்; காயும் ஞாயிற்றின் கொடிய வெயிலை மறைக்கும் மர நிழல் காண மாட்டாது அவள் மேனி வாடும்; அவம் றைத் தாங்க மாட்டாது அவள் கண்ணிர் விட்டுக் கலங் குவள் என்ற எண்ணம் அத் தாயின் துயரை மிகுவித் தது. ஆல்ை, மகள் பின் சென்று. ஆங்கு அவள் படும் துயரை மாற்றுவது அவளால் இயலாது. என்றாலும், வறிதே இருக்க அவளால் முடியவில்லை. அதனல், இறைவனே நோக்கி இரு கைகளையும் கூப்பி வணங்கினுள்; ஆண்டவனே! மகள், மழையும், மரநிழலும் அற்ற மலைவழியில் செல்கின்றாள்; கூரிய கற்கள் மலிந்த அக்காட்டு வழியில் கொடுமை உறுவள். கொண்டு செல்லும் இளைஞன், காளை போலும் ஆண்மை வாய்ந்தவனே; அவன் கையில், கொடுமை செய்வார் உயிர் போக்கும் நெடிய வேல் உளது என்பதும் உண்மையே; ஆனால், அதனல், அவளுக்குக் காட்டு விலங்குகளாலும், அவ் விலங்கு நிகர் கொடியோராலும் உண்டாகும் ஏதங்களைத் தான் போக்க இயலுமேயல்லது, இயற்கை அளிக்கும் கொடுமைகளைப் போக்குவது இயலாது; அக்கொடுமை போச்குவான் நீ ஒருவனே; ஆண்டவனே அவள் சென்ற வழி யைக் கொடுமை அகன்று இனிமை உடையதாக மாற்றித் துணை புரிய வேண்டுகிறேன்; உன் அருளால், அவ்வழியில், ஞாயிறு தன் கொடுமை தோன்றக் காயாது மேகத்திடையே மறைந்து போகான? மரங்கள் எல்லாம் தழைத்து நிறைந்த நிழலைத் தாராவோ? மலைக் கற்கள் உடைந்து பொடியாகி மணல் பரவாதா மழை பெய்து, வழியெல்லாம் தண்ணிர் வழிந்து, தண்ணெணக் குளிராதா’ எனப் பலப்பல கூறி வேண்டிக் கொண்டாள்; என்னே அத்தாய் அன்பு! “ஞாயிறு காயாது, மரம் நிழல் பட்டு,

மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்த்