பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அச்செயல் உலகோரால் ஒப்புக் கொள்ளப் பெற்று உலகெங் கும் காணலாகும் ஒர் உலகியல் நிகழ்ச்சி என உணர்ந்தாள்; வழியில் வருவார் போவார் அனைவரையும் ஊன்றி நோக்கி நோக்கி, அவள் சண்கள் ஒளி குன்றின; அவ்வளவும் ஆன பிறகு, அவ ளுக்கு அவ்வுண்மை புலஞயிற்று புவகைவே, மகளைத் தேடிச் செல்வது வீண் முயற்சி, இனி, அவள் விரும்பும் அவனுக்கு அவளை மணம் செய்து வைப்பதே மாண் புடைத்து எனக் கொண்டாள்; வீட்டில் உள்ளார்க்கு வேண் டும் வகையால் கூறி, வரைவை விரைவில் முடிப்பேன் எனும் உறுதி ஆண்டு வீடடைந்தாள்.’

காலே பரிதப்பினவே, கண்ணே

நோக்கி நோக்கி வாள் இழந்தனவே; அகல் இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே’ .

ஒன்று கூட்டிய ஊழே. நீ வாழி!

வீடு திரும்பிய செவிலி பெண்ணைப் பெற்றவர்ச்குக் கூற வேண்டுவன கூறித், திருமணத்திற்கு இசையுமாறு செய்தாள். மணநாள் குறித்தாயிற்று; இரு பெரும் சுற்றத்தினரும் ஒன்று கலந்தனர்; திருமணம் இனிது முடிவுற்றது. மணத்திற்கு வந்திருந்தோர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்; வாழ்த்திய பெரியோர்களில், அவ்விரு குடும்பத்தினரோடும் பல்லாண்டு காலமாகப் பழகிய சிலர் இருந்தனர். அவர்கள் வாழ்த்துரை வழங்க எழுந்திருந்ததும், அவர் மனக் கண்முன்

a குறுந்தொகை 44. வெள்ளி வீதியார்.

பரிதப்பின - நடை தளர்ந்தன; வாள் . ஒளி, இரு - பெரிய, விசும்பு . ஆகாயம்; மீனினும் - மீனைக் காட்டிலும்; மன்ற - உறுதியாக பிறர் . இவளும் இவனும் போல் கூடி ஒடிப் போனவர், - .