பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jih

மனங்கொள்ளும் நம்பியும் நங்கையும் தெருவில் நடைதேர் உருட்டியும், மணல் வீடு கட்டியும் ஆடி கிழ்ந்த அவ்விள மைக் சாட்சி தோன்றி அவர்க்கு மகிழ்ச்சி ஊட்டிற்று. அம் மகிழ்ச்சியில் திளைத்துச் சிறிது மெய்ம்மறந்து இருந்துவிட்டுப் பின்னர் வாழ்த்தத் தொடங்கி, ஐவேறு வகையாசப் பின்னி விடப்பட்டிருந்த இவள் அழகிய கூந்தலை இவன் பற்றி இழுப் பான் இவன் தலைமுடியை இவள் கைப்பற்றி வளைத்து வலிப் Hாள். தம் ஆட்டத்திற்கு இடையே சிறிது ஊடி இவர்கள் மேற்கொள்ளும் அச்சிறு சண்டையை, இருவரையும் பேணி வளர்க்கும் பொறுப்பேற்றுக்கொண்ட செவிலித்தாயர் இடை பிட்டுப் போக்கி இன்புறுவர். தம் ஆட்டத்திற்கு இடையிடை யே ஊடும் இயல்புடையவராய்க் காணப்பட்ட அவர்கள், ஆண்டு முதிர முதிர, ஒருங்கே பிணைப்புண்ட இருமலர்கள் போல், ஒருவர்க்கு ஒருவர் இன்றியமையாராய் ஒன்றுபட்டு விட்டனர்; ஆனல், அன்று அவர் சிறு சண்டைகளை முன்னின்று போக்கிய பெற்றாேர், பிற்காலத்தில் அவர் திருமணத்திற்கு ஏனே இசையாராயினர். பெற்றாேர் இசைந் திலர் என்பதை அறிந்தும் இவர்கள் மணந்து மனையறம் மேற் கொள்ளத் துணிந்தனர். இளமையிலேயே இவ்வாறு போராடும் இவர்கள் எவ்வாறு மணந்து மனையறம் மேற் கொள்வாரோ என்ற எம் கவலை ஒழிந்தது; பின்னர், இவர் மணத்திற்கு ஒப்பாத இவர் பெற்றாேர், இன்று அவர்க்கு மணம் செய்து மகிழக்கண்டு, பெற்றாேt பகையால், இளம் உள்ளங்கள் ஒன்றுபடுதல் இல்லாகிவிடுமோ என்ற அச்சமும் இப்போது ஒழிந்தது; இளமையில் இவர் உள்ளத்தில் தோன்றிய பசையுணர்ச்சியையும், இவா பெற்றாேர் உள்ளத் தில் இன்று தோன்றிய பகையுணர்ச்சியையும் ஒருங்கே போக்கி, இருவரையும் மணமக்களாக்கி மகிழவைத் த ஆற்றல் அவர் ஆகூழிற்கே ஆகும்; வாழ்க அவர் ஊழ்வினே’ எனக் கூறி வாழ்த்தினர்.

- “இவன் இவன் ஐம்பால் பற்றவும், இவள் இவன்

புன்தலை ஓரி வாங்குகள் பரியவும். காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது