பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஏதில் சிறுசெரு உறுப மன்ளுே; நல்ல மன்ற அம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணமகிழ் இயற்கை காட்டு யோயே.” 2

கணவன் இனிது என உண்ணக் களிக்கும் இவள்

உள்ளம் :

அவளும் அவனும் தனி வாழ்க்கை மேற்கொன்டனர்; பலரும் கண்டு பாராட்டும் வகையில், அவர் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது; மகள் ஆற்றும் மனையற மாண்பை நேரில் கண்டு மகிழ விரும்பினுள் தாய்; அவ்வேட்கை மிகுதி யால் மகள் மனைக்குச் சென்று சிலநாள் வாழ்ந்திருந்தாள். மகள் நடாத்தும் மனைவாழ்க்கையின் மாண்பு கண்டு மகிழ்ந் தாள்; கணவன் குறிப்பறிந்து நடந்துகொள்ளும் அவள் அறி வையும், மனைவியைப் பிரிந்து வாழ விரும்பாத அவன் அன்பையும் கண்டு களித்தாள்; சிலநாள் சழித்துத் தன்னுரர் அடைந்தாள்: உறவினர் பலர் மகளின் மனையற மாண்பு குறித்து உசாவினர்; அவர்க்கு, ஆங்குத் தான் கண்ட மகள் இல்வாழ்க்கைச் சிறப்பை எடுத்துரைக்கத் தொடங்கினள். கணவன் விரும்பியுண்ணும் உணவு புளிக்குழம்பு என்பதைச் சென்று வாழத் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே கண்டு கொண்டாள் நம் மகள். வீட்டில் பணிப் பெண்கள் பலர் இருப்பவும், அவன் சுவையறிந்து செய்யும் ஆற்றல் அவர்க்கு இராது என எண்ணிச் சோருக்கும் பணியைத்

a குறுந்தொகை : 229. மோதாசஞர்.

ஐம்பால்-ஐ வகையான கூந்தல்; புன்த-ைசிறிய தலை: ஒரி-மயிர்; வாங்குநள்பரிய-வளைத்து இழுக்க தவிர்ப்பஇடைபுகுந்து தடுக்க ஏதில்-பொருளற்ற, சிறுசெரு-சிறு சண்டை; உறுப.செய்வர்; நல்லே-நன்மை உடையாய்; மன்றநிச்சயமாக; பால்-ஊழ், துணைமலர்-இரட்டை மலர்; பிணையல்-ழா,ை - * . . . . .