பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தன் வினையாயினும் வெளியூரில் தங்கான் !

மகள் மனையற மாண்பு கூறி மகிழ்ந்தவள், அவள் கணவன் அவள் மாட்டுக் கொண்டுள்ள அன்பின் பெருமை யினைப் பாராட்டத் தொடங்கிளுள். “நம் மகளின் மனையற மாண்பிற்குப் பெரிதும் காரணமாயது, அவள்பால் அவள் கணவன் காட்டும் பேரன்பே; அவர் இருவர் உள்ளங்களும் அன்பால் ஒன்றுபட்டுவிட்டன; அவளை இமைப்பொழுது பிரிந்து வாழவும் அவன் விரும்புவதில்லை; மனேவியைத் தனியே விடுத்துப் பிரிந்து வெளியே செல்லவேண்டிய தேவை அவனுக்கு இல்லை; பொருள் வேண்டிப் பிரிய வேண்டிய இன்றியமையாமை அவனுக்கு இல்லை; வளம் கொழிக்கும் வீடு அவன் வீடு; அதஞல் அவன் அவளை என்றும் பிரிவதில்லை; ஆனல், அரசியல் ஆர்வம் உடையவன் அவ்விளைஞன்; அதஞல் அரச ஆணை மேற்கொண்டு ஒரோவொருகால், தேர் ஏறி வெளியூர்க்குச் செல்வன்; அரச ஆணை மேற்கொள்வது அறமாம் எனும் அறவுள்ளம் உடைமையால், அவன் பிரிந்து செல்லினும், சென்ற இடத்தில் ஒருநாளும் தங்கான்; எடுத்துச் சென்றவினை எவ்வளவு பெரிது ஆயினும், அதை விரைந்து முடித்துக் கொண்டு அன்றே வீடு வந்து சேர்வன்; மணமாகி இத்தனை நாளாகியும், ஒரு நாளும் அவன் தேர் வெளியூரில் தங்கியதில்லை; மனேவியைத் தனியே விடுத்து வெளியூரில் தங்க, அவன் அன்பு அவனே விடுவதில்லை. அத் துணை அன்புடையான் அவன்” எனக் கூறித் தன் மகள் மீது அவள் கணவன் கொண்டுள்ள அளப்பரிய அன்பு கண்டு அகம் மகிழ்ந்தாள்.

வேறுார்,

வேந்து விடு தொழிலொடு செலினும் சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.” .

முளிதயிர்-சிவக்கக் காய்ந்து இறுகிய தயிர்; காந்தள். காந்தள் மலர் போன்ற கழுவுறு கலிங்கம்.கழுவிய கைகளால் சட்ட வேண்டிய ஆடை உண் கண்-மைதிட்டிய கண் குய்ப்