பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கற்பும் கடமையும்

உலகில் வாழும் உயிர்கள் பல வாயினும், அவற்றுள் உயர்திணை உயிர் எனப் புகழ்ந்து பாராட்டப் பெறுவது மக்கள் உயிர் ஒன்றே. பிற உயிர்கள் அறியாக், காதல் கடமை யுணர்வுகளை அறிந்து, அவற்றின் வழி வாழும் உயர்ந்த ஒழுக்க நெறியில் நிற்பதனாலேயே அது அவ்வாறு பாராட்டப் பெறுகிறது. காதலின் பெருமையைக், கடமை யின் சிறப்பை உணர்ந்து வாழ்பவரே மக்கள். மக்களாய்ப் பிறந்தார். ஒவ்வொருவரிடத்திலும், அவ்வொழுக்க நெறி இழுக்காது நிற்றல் வேண்டும. ஒருவனும் ஒருத்தியும் உள்ளம் கலந்து ஒன்றுபட்டு வாழும் இல்வாழ்க்கை, காதற் பண்பு வாய்ந்து விளங்குதல் வேண்டும். அவ்வாழ்க்கை, காதல் மயமாய்க் காட்சி அளித்தல் வேண்டும்; வாழ்க்கை வேறு, காதல் வேறு என்ற வேறுபட்ட நிலை ஆங்கு இடம் பெறுதல் கூடாது; சொல், செயல் எதிலும் காதல்; இரவு பகல் எப்போழுதும் காதல்; இன்பத்திலும் காதல்; துனபத் திலும் காதல் என்ற நிலை வாய்த்தல் வேண்டும். கணவனே யும், மனைவியையும் இறவாப் பேரின்பம் மல்கும் இன்ப உல கிற்கு ஈர்த்துச் செல்வதோடு காதலின் கடமை முடிந்துவிடு வதில்லை. அவர் வாழ்வில் இரண்டறக் கலந்து விளங்கும் காதல், அவர் உள்ளத்தில் கடமை யுணர்ச்சிக்கு வித்துறிை வளர்க்கும் விழுமிய துணையாதலும் வேண்டும். அவர் காதல் மரம், கடமை எனும் கனயிளே சன்றும் கவினுறுதல் வேண்டும்; அவர் காதல் வாழ்வில் கடமையுணர்வு கருக் கொள்ளாதாயின், அக்காதல் பயனற்றுப் போம்; காதல்,

புகை-தாளிப்புப் புகை துழந்து-துழாவி, அட்ட-ஆககியத் பாகர்.குழம்பு.

குறுந்தொகை 2421 குழல் தத்தன். வேறு: ஊர்-வேற்றுார்; செலினும்.உம்மை செல்லான் எனும்குறிப்புணர நின்றது; சேந்து.தங்கி; செம்மல்-தலைவன் தோ சோத்துவரல் அறியாது என மாற்றுக, -