பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iiff

அவர் வாழ்வின் பண்பாயின், கடமை அதன் பயனதல் வேண்டும். அன்பும் அறனும் உடைத்தாயின், இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என விதி வகுக்கும் வள்ளுவர் வாய்மொழியும் காண்க.

ஒர் ஆணும் ஒரு பெண்ணும் தனித்தனியே நின்று ஆற் றும் கடமைகளால் உலகம், கருதிய பயனைப் பெற்றுவிடாது; அவர் இருவரும் கணவனும், மனேவியுமாய்க் கலந்து, ஒரு வர்க்கு ஒருவர் துணையாய் நின்று கடன த்றும் பொழுதே, உலகம் நிறை பயன்பெறும். இவ்வுண்மையை உணர்ந்தே, உலகியல், ஒருவனும் ஒருத்தியும் ஒன்று கூடி வாழும் காதலை உருவாக்கி அளித்துள்ளது; ஆகவே, கடமையை வளர்க்கக் காதல் வேண்டும்; காதல், கடமையை வளர்ச்கும் விழுத் துணையாய் வாழ்தல் வேண்டும்; காதல் கடமைக்காகவே வாழ்தல் வேண்டும். கடமைக்குக் காதலே அன்றி காதலுக்குக் கடமை அன்று; கடமையை மறந்த காதல் காதலாகாது; காதல் கடமையை வளர்க்க வேண்டுமே யல்லது, அக்கடமை யுணர்வை அழிப்பதாதல் கூடாது.

எனக்சாச, நான் வாழ என்பதினும், என் காதலைக் கொள்ளே கொண்ட இவருக்காக, இவர் இன்புற்று வாழ நான் கடமையாற்றுதல் வேண்டும் என்ற விருப்பம், ஒருவர் உள்ளத்தில் இடம் பெற்ற வழி, அவர் ஆற்றும் கடமையே நிறைந்த பயன்தரும். ஆகவே தான் கடமை நெறி நிற்பார் உள்ளத்தில் காதல் உணர்வு அரும்புதல் வேண்டும் எனப் பெரியோர்கள் விதி வகுத்துள்ளார்கள். இவ்வுணர்வு வாய்க்கப்பெற்றமையினலேயே, மக்கள் உயிர் ஏனைய உயிர் களினும் சிறப்புடையதாக மதிக்கப் பெறுகிறது.

காதல் வேகத்தில், கடமையைக் கைவிடுவதோ, கடமை நெறி நிற்கும் கருத்தால் காதல் மறப்பதோ கூடாது, காதல் அற்ற வாழ்வு வாழ்வாகாது. அது வறண்ட பாலை வனம் போல் வளம் இழந்து போகும். காதல் அறியாதவரின் கடமையுணர்வு நாளடைவில் நலிந்து; நீங்கிவிடும். அதைப் போலவே, கடமையை மறந்தவர் தம் வாழ்வின் பயனும்