பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ite

இன்பத்தை அடைதல் இயலாது; ஆகவே, காதல், கடகை களே இரு கைகளிலும் பற்றிக்கொண்டு ஒருங்கே அழைத்துக் செல்லும் உயர்வாழ்வினராதல் வேண்டும்; தான் இன் புற்று வாழ்தலோடு, பிறரும் இன் புற்று வாழப் பாடுபடுதலே வாழ்வின் பயன் என்பதை மறந்து, தாம் மட்டும் இன் புற்று வாழத் தலைப்படுவார்க்கும், உண்ணுவது, உறங்குவது, ஆணும் பெண்ணும் கூடி இனம் வளர்ப்பது என்பதல்லது வேறு விழுமிய வாழ்வறியா விலங்கினத்திற்கும் வேற்றுமை யின்றாம், -

அரிவையும் வருமோ?

இவ்வுண்மைகளே உணர்ந்தவன் நம் இளைஞன்; காதல் வேகத்தில் கடமையைச் சிறிதே மறந்கிருந்த அவன், மணம் செய்துகொண்டு, மகனயற வாழ்க்கையில் புகுந்ததும் உணர்வு பெற்றான்; இல்லற வாழக்கை பிறரை வாழ்விக்க வந்த பெரிய அற வாழ்க்கை; உலகில் வாழும் ஒவ்வொருவரும் உயர்நிலை அடைய உறுதுணை புரிய வந்தவன் இல்வாழ்வான்; *இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற் றின் நின்ற துணை.’ உலகில் வாழும் ஒவ்வொருவரும் உண வும், உடையும் உறையுளும் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழத் துணைபுரிய வேண்டியவன் இல்வாழ்வான்; அவ்வழி வாழ்ந்து, விழுமிய புகழ்பெற்று வாழ்வதே வாழ்வின் பயனும் என்ற உண்மைகளை உணர்ந்தான்.

புகழ் நிறைந்த வாழ்வு வாழ்தல் வேண்டும்; அப்புகழை அளிக்கவல்ல அரிய தொண்டாற்றுதல் வேண்டும் என உணர்ந்தவன், அதற்குப் பெருந்துணை புரியவல்லது பொருள் என்பதையும் உணர்ந்தான்; கடமைகளைக் குறைவறச் செய்ய கடமைகளைச் செய்து காதற்பயனை அடையத் துணைபுரிவது பொருள்; அறத்தை வாழ்விப்பது பொருள்; இன்பத்தை வளர்ப்பது பொருள்: காதல் உள்ளம் வாய்க்கப் பெற்று, அதன் காரணமாய்ப் பிற உயிர்களைப் பேணிக்