பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

காக்க வேண்டும் எனும் கடமை யுணர்ச்சி வாய்க்கப் பெறு வாரின் விருப்பத்தை நிறைவேற்றித்தரும் வல்லமை பொருள் ஒன்றினுக்கே உண்டு; காதல் பெற்றெடுத்த கடமை உணர்வை, உரம் ஊட்டி வளர்ப்பது பொருள்; அருள் என்னும் அன்பு ஈன்குழவி, பொருள் என்னும் செல்வச் செவி லியால் உண்டு.” என்ற உணர்வுடையஞயினன்.

பசியை ஒழிப்பது பொருள்; பிணியை அறுப்பது பொருள், பகையை அழிப்பது பொருள் எனப் பொருளின் பெருமையை உணர்ந்த அவன், அப்பொருள், அரும்பாடுபடுவாரே அடைய லாகும்; இல்லற இன்பமே இறவா இன்பம் என எண்ணி, இல்லாளை இமைப்பொழுதும் பிரியா அடங்கி யிருப்பார் அப் பொருளை அடைதல் இயலாது. மனைவி தரும் இன்பமே இன் பம் என மதித்து, மனதை அவ்வின் பத்திற் பறிகொடுத்துக் கிடப்பார் மாண்புடையராதல் இயலாது; மக்களுக்குத் தொண்டாற்றி, மாயாப் பெரும் புகழ்பெற்று வாழக் கருது வார், மனைவி தரும் இன்பம் ஒன்றிலேயே மயங்கி விடுதல் கூடாது. மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினவிழை வார் வேண்டாப் பொருளும் அது.” மகனவியைப் பிரிந்து போய், அவளும் தானும் நன்கு வாழவும், அவளும் தானும் கூடி உலகை நன்கு வாழ்விக்கவும் துணைபுரியும் பெரும் பொருள் ஈட்டி வருதல் வேண்டும். அக்கடமை யுணர்வால், தன் காதல் வாழ்விற்குச் சிறிதே தடிை நேரினும் கேடில்லை; கடமையை எண்ணி அதைத் தாங்கிக் கொள்ளுதல் வேண் டும் எனத் துணிந்தான்.

உயிர்கள் இன்ப நாட்டம் உடைய! இன்ப நாட்டம் உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் ஒத்த இயல்பாயினும், புகழாசை மக்கள் உயிர் ஒன்றிற்கு மட்டுமே உரித்து; புகழாசை, இன்ப வேட்கையினும் ஆற்றல் வாய்ந்தது; தம் பெயர் உலகம் உள்ளளவும் நின்று வாழ வேண்டும் எனும் ஆசை, தாம் என்றும் இன்புற்று வாழ வேண்டும் எனும் ஆசையினும் ஆற்றல் வாய்ந்தது. புகழ் பெற,