பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



துப் பிரிந்து யோகத் துணிந்துவிட்டான். அதற்காகவே அவன் இத்துணையும் கூறினன் என்பதை அறிந்தாள்: அந்நிலையே, அவனைப் பிரிந்து பல்லாண்டு ஆனவள்போல் பெருந்துயர் கொண்டாள். அன்பும் ஆர்வமும் பெருக நின்று கேட்டிருந்த அவள் நிலை மாறிற்று; துன்ப உருவாயிளுள்; துயர் அவளைச் சூழ்ந்துகொண்டது; தளர்ந்தது அவள் உடல்: கருவிழிகள் கண்ணிரால் மறைப்புண்டன; அழத்தொடங்கி விட்டாள் அவள், அவள் நிலையை அவன் கண்டான்; அவன் துணிவு எங்கோ பறந்தது; பிரிந்து போகற்க என்று அவள் வாய்திறந்து சொல்லவில்.ை என்றாலும், அவள் கலக்கமும் கண்ணிரும் அதைச் செய்துவிட்டன; அவற் றைக் கண்ட பின்னரும் அவளைத் தனியே விடுத்துப் போகும் ஆற்றல் அவனுக்கு இல்லாது போயிற்று. அவன்செயல் ஆற்றான்; சிந்தை குழம்பியது; விரைந்து வெளியே சென்றான்; தெருவில் நின்றிருந்த தேரில் பூட்டியிருந்த குதிரைகளைக் கட்டவிழ்த்துவிட்டான்; தன் அறை அடைந்து அமைதி யிழந்து அந்ேதான்.

“மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகை பிணிகால் மென்கொம்பு பிணையொடும் ஆர்ந்த மானேறு உகளும் கானம் பிற்பட வினைகலம் படீஇ வாதும்; அவ்வரைத் தாங்கல் ஒல்லுமோ பூங் தழையோய்! எனச் சொல்லா முன்னர் கில்லாவாகி நீர் விலங்கு அழுதல் ஆளு தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே.” 2

a குறுந்தொகை 256.

மணி-நீலமணி, வார்ந்தன்ன-வரிசையாக வைத்தாற் போன்ற மாக்கொடி-கரியகொடி, உகளும்-துள்ளி ஆடும்; படிஇ . உண்டாகப் பெற்று; அவ்வரை - அ துவ ைர; ஒல்லுமோ-இயலுமோ, நீர்விலங்கு அழுதல் . நீர் நிறைந்த அழுகை, விலங்கின.தடுத்தன.