பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i25

ஆளுல் அத்தயக்கம் நெடிது நிற்கவில்லை; கடமையுணர்வு அவன் கலக்கத்தை அழித்துவிட்டது; அவனும் அவன் காதலி யும் சளித்து வாழ விரும்பும் அவன் காதல் உணர்வினும், “என் வாழ்நாள் உலகெல்லாம் வாழத் துணைபுரியும் உயர்வு டையதாதல் வேண்டும் என உணர்ந்த அவன் கடமை யுனவுே உரம்பெற்றுவிட்டது. அதனால் பொருள் ஈட்டி வரத் துணிநிது போதற்கு வேண்டும் ஏற்பாடுகளை விரைந்து மேற் கொள்ளத் தலைப்பட்டான்.

அதைக் கண்டு கொண்டாள் அவன் காதலி. அவன் போவது உறுதி; பொருளின் இன்றியமையாமை அவன் உள் ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது; பொருள் தேடிப் போகத் துணிந்த அவன் முடிவை மாற்றும் ஆற்றல் வேறு எதற்கும் இல்லை. அவனைப் போக விடுத்துத் தனித்துக் கிடந்து துயர் உறுவதல்லது தன்னல் செய்யக்கூடியது இல்லை என்பதை உணர்ந்து கொன்டாள். அவள் கலக்கம் பெரிதாயிற்று; ஆவள் கண்கள் குளமாயின. அந்நிலை யில், ஆங்கு வந்த தோழியைக் காணவே அவர் துயர் மேலும் மிகுந்தது. “தோழி! காதலர், பொருள் ஈட்டிவரும் பனி மேற்கொண்டு புறநாடு போகத் துணிந்துவிட்டார்; இமைப்பொழுதும் பிரியாதிருந்து இன்பம் தரவேண்டிய இல் விளமைப் பருவத்தில் பிரிந்து போகத் துணிந்துவிட்டார்; மழை மறந்து போனமையால் பசுமையிழந்து வறண்டுபோன பாலை நிலத்தில், மரங்கள் உணர்ந்துபோக, விலங்கினங்கள் வாழ்விழந்து போக தனிமையுணர்ச்சிகாட்டும்காட்டு வழியில் பழக்க மிகுதியால் அந்நியிேலும் அப் பாலை நிலத்தைவிட்டுப் பிரிய மன மின்றி வாழும் காதலனும் காதலியுமாய்க் கூடிக் குலாவும் புரு இனங்கள். நன்கு முற்றி உலர்ந்த கள்ளிக் காய்கள் வெடிக்கும் ஒலி கேட்டு வெருண்டு, ஒன்றை யொன்று மறந்து பிரிந்து பறந்தோடிப் போவது போலும் கொடுமை மிக்க காட்கிகளைக் கண்டுகொண்டே செல்லத் துணிந்துவிட்டிார்.

தோழி! பொருட்குறைபாடுற்றமையால் புகழ்பெற மாட்டாத் துயர்நிலை மிகவே, புகழ்தரும் பொருள்