பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டி வரப்போகாது, மண்வியோடு மடிந்து கிடக்கின் றனனே’ என ஊரார் உரைக்கும் அலர் உரைக்கு அஞ்சிக்க காதலனும் காதவியுமாய்க் கலந்து வாழ்ந்த எம் வாழ்வு பாழாக, என்னைக் கைவிட்டுச் செல்லும் இவர். அக் காட்டு வழியில், காதற் சேவலைக் காண மாட்டாமையால், கலங்கும் பேட்டுப் புறவின் கொடிய துயர்நிலை, காதலனைக் காணுது கலங்கும் என் துயர் நிலையை நினைப்பூட்டும் என்பதை நினையாது, காதலைமறந்து, பெண்ணுெருத்தி கண்ணிர்விட்டுக் கலங்கக் காணின், அவள் துயர்போக்கி ஆட்கொள்ளுதல் வேண்டும் எனும் அருள் உள்ளமும் இல்லாது போகத் துணிந்துவிட்டார்.

“தோழி! காதலியைக் கைவிடுதல் கூடாது என்பதை மறந்து, கண்ணிர்விட்டுக் கலங்குவார் யாரேயாயினும் அவர் துயரைத் துடைத்தல் வேண்டும் எனும் அருள் உள்ளமும் அற்று, அவரைப் போகத் தூண்டும் அத்துணை ஆற்றல் அப் பொருளுக்கு உண்டுபோலும்! தோழி! அவர் தேடிச் செல்லும் அப்பொருளே, உலகில் அழியாச் செல்வம்போலும், அந்தோ! அழியா வரம் பெற்ற அருளே உலகில் ஆதரிப்பார் எவரும் இலர் போலும்! அழியும் பொருள் போற்றப் பெறுகிறது: அழியா அருள் புறக்கணிக்கப் பெறுகிறது; தோழி! என்னே இவ்வுலகியல்!” எனக் கூறி அருள் அழிவு கருதி அழுவாள் போல், தன் இன்ப வாழ்வின் இழப்பு குறித்துப் பெரிதும் வருந்தினுள்.

“பெயல்மழை துறந்த புலம்புறு கடத்துக் கவைமுள் கள்ளிக் காய்விடு கடுகொடி துதைமென் துாவித் துணைப்புறவு இரிக்கும் அத்தம் அரிய என்ஞர் கத்துறந்து பொருள்வயின் பிரிவாராயின், இவ்வுலகத்துப் பொருளே மன்ற பொருளே, அருளே மன்ற ஆரும் இல்லதுவே. a உ குறுந்தொகை: 174. வெண்பூதி. புலம்புறு தனிமையுணர்ச்சிமிக்க, கடம் - காட்டுவழி: