பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் புதையல்

குறுந்தொகைக் கோவை

1. களவும் காதலும்

ஒருவனும், ஒருத்தியும், அவர் மக்களும் ஒன்று கூடி வாழும் வாழ்வே ஒரு குடியாம். அத்தகைய குடி பல, சேரின் ஓர் ஊராம். ஊர்கள் பலவற்றைத் தன்னகத்துக் கொன் டதே ஒரு நாடாம்; ஆகவே ஒரு நாட்டின் வாழ்வு, அந்நாட்டு மக்களின் வாழ்விற்கேற்ப அமையும். மக்கள் வாழ்வு, வளம் செறிந்து அமைதி பெற்ற நல்வாழ்வாயின், அந்நாட்டு நிலை யும் நன்றாம். மக்கள் வறுமையால் வாடி, அதன் காரணமாய் வழுக்கி வீழ்ந்த வாழ்வினராயின், அந்நாடும் வாழ்விழந்து போகும். அரசனும் இல்வாழ்வார் இல்வழி, இல்’ என நான்மணிக்கடிகை கூறுவதும் கான்க.

பழந்தமிழ் நாடு, பன்டு, யாரெலாம் போற்றும் பெரு வாழ்வு பெற்றுத் திகழ்ந்தது என்றால், அதற்குக் காரணம், அந்நாட்டில், அன்று குடிவாழ்ந்த ஒவ்வொருவரும் தத்தம் கடனறிந்து வாழ்ந்தமையேயாகும். மக்களைப் பெற்று, அவர் உடலிற்கு உரம் ஊட்டி ஒம்புதல் தன் கடனம் என உணர்ந்திருந்தாள் தாய். அம்மக்களுக்கு அறிவும் ஒழுக்க