பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i:

உாவோர் உாவோர் ஆகுக!

தன் கணவன் உலகெலாம் போற்றும் உயர் பேரறிவாள ளுக விளங்க வேண்டும் எனும் ஆசை உடைய அவள், பொருள் தேடிப்போகும் அவன் போக்கால் அவ்வாசைக் கனவு அழிந்து போவது கண்டு கண்ணிர் சொரிந்து கலங்கி ளுள். உள்ளம் அது விரும்பும் உணர்வுகள் அனைத்தினும் சென்று அலையாது, அவ்வுணர்வுகளுள் நல்லனவற்றின் பால் மட்டுமே செல்லுமாறு அவ்வுள்ளத்திற்கு அரண் இட்டுக் காப்பது அறிவு. சென்றவிடத்தால் செலவிடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’ மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்பொறிகளின் உணர்வினே அடக்கி ஆளவல்ல உள்ளுரம் அவ்வறிவினுக்கு வாய்த்திருந்தமை யால் ஆதற்கு உரம் எனும் ஒரு பெயரிட்டுப் போற்றினர் பெரியோர், அதனுல் அவ்வறிவு லாய்க்கப் :ேற்றவர்கள், உரவோர் எனவும் அழைக்கப்பெற்றனர். அவ்வரும்பெரும் பெயர் தன் கணவனுக்கும் வாய்க்க வேண்டும் என்பதில் ஆர் வம் காட்டியவர்களுள் அவளும் ஒருத்தி; அத்தகையாள்,

இன்று அவன் போக்கால் அது அழிந்துபோவது கண்டு இவை கொண்டாள்.

புகழ் நிறைந்த வாழ்வினராதல் வேண்டும் என விரும்பி, அப்புகழ் பெறத் துணைபுரிய வல்லது பொருள் என உணர்ந்து அப்பொருள் ஈட்டிவரத் துணிந்த தன் கணவன், அப்பொரு ளிட்டும் வழி முறைகளை அறியாமை அறிந்து பெரிதும் கவலை யுற்றாள். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றனுள். பொருளிட்ட எண்ணுவார், அறவழியை மறத்தல் கூடாது; அன்பு நெறியில் பிறழ்தல் கூடாது. பொருள் அறத்தை வளர்க்கும்; இன்பத்தை அளிக்கும் என்றாலும், அறம்வளர்த்

கவை . இரண்டும் மூன்றுமாகக் கிளைத்த விடு - வெடித்து விடுக்கும்; கடுநொடி-பேரொலி; துதை-நெருங்கிய; துணைப் புறவு-சேவலும் பேடுமாகிய புருக்கள்; இரிக்கும்.விரட்டும்; அத்தம்-காட்டுவழி மன்ற-உறுதியாக,