பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tes

மறந்து விட்டான்; இதை மறந்த அவனை அறிவுடிை உலகம் பழிக்குமே என அஞ்சிள்ை; அவ்வச்சம் அவள் கலக்கத்தை அதிகமாக்கிற்று.

அச்சம் அவள் அகத்தை அலைக்கழித்தமையால், தோழி அருளேயும் அறத்தையும் மறந்து மதியாது, அவற்றிற்கு மாறு பட்ட நெறி நின்று பொருளீட்டி வருவது அறிவுடைமையல் லவே; அதுவே அறிவுடைமையாம் என அவர் கருதுவாரா யின், தோழி! அவ்வறிவினே அவர் ஒருவர் மட்டுமே அழுந்தப் பெறுவாராக; அந்த அறிவு நம்பால் பொருந்தாது ஒழிக, அத் தகைய அறிவு பெரு மடமை நிறைந்த மகளிராகவே நாம் வாழ்வோமாக’ எனக் கூறி, “தோழி! அவர் பால் சென்று, ‘அருளேயும் அன்பையும் மறந்து, வாழ்க்கைத்துணை என வந்த வளேக் கைவிடுதல் கூடாது எனும் அறத்தை அறவே மறந்து பொருள் ஈட்டப் போவதே அறிவுடைமையாம் எனக்கொள் ளும் உன் முடிவினே ஏற்றுக்கொள்ள மாட்டா மடமை உடை யேம் யாம்’ என்பதை அறிவித்து வருக” என்ற தன் வேட்கை யினை வெளிப்படுத்தி வருந்தி நின் ருள்.

“ அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து

பொருள்வயின் பிரிவோர் உரவோராயினும், உரவோர் உரவோர் ஆக; மடவம் ஆக, மடங்தை! நாமே” a

அழா அல் தோழி

அப் பெண்ணின் உள்ள நிலையைத் தோழி உணர்ந்தாள்: கணவன் பிரிவால் மனைவிக்கு உளதாகும் துன்பம் எத்த கைத்து என்பதை உணர்ந்திருந்த அத் தோழி, உலகியல்பு

a குறுந்தொகை 1 20. கோப்பெருஞ் சோழன். உரவோர்.அறிவுடையோர் ஆக-ஆகுக’ மடிவம்-அறிவு ஆற்றவரேம்,