பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

உயிர், அவர் மனங்கொன்டி ஆடவரே ஆம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பென்ணே கணவர் தன்னலம் கருதுவாரல்லர் உனக்கு உயிர் தாமே என்பதை உணர்ந்த அவர், உன் வாழ்வை அழித்துவிட்டு, நீ உயிரிழந்து போமாறு உன்னே விட்டுப் பிரிந்து போகார்; தமக்கு உயிர் என விளங்கும் வினே யாற்றும் விருப்பத்தால், வினையாற்றித் தாம் மட்டும் வாழ விரும்பும் விருப்பத்தால்,உன் வாழ்வைப் பாழாக்குவாரல்லர்; பிறரை வாழ்விக்கத் தம் உயிரை இழக்கவும் துணியும் தண்ணளி நிறைந்த அவர், உன்னேவிட்டுப் பிரியாது, உன் ளுேடே வாழ்ந்து உன்னே வாழ்விப்பர்; அதனுல் தம் உயிராம் தம் கடமைகளை மறக்கவும் அவர் துணிவர்; வினேமேற் சென்று விழுமியோன் எனப் பாராட்டும் உலகோர் பாராட்டை இழந்து, ‘வினேயாற்றும் வன்மை இழந்தவன்; ஆடவன் என அழைக்கும் தகுதி அற்றவன்’ என உலகோர் பழிக்கும் பழியுரைகளை ஏற்று, நடைப் பிணமாய் வாழினும் வாழ்வரே யல்லது, உன்னைப் பிரிந்து, உன்னை உயிர் இழக்கச் செய்யார்! பிறரை வாழ்விக்கத் தாம் வாழ்விழக்கவும் தயங் காத் தறுகளுளராய அவர், அவர் மனைவியாகிய நீ மாண்டு போகப் பிரிந்து செல்லார்; இது உறுதி; ஆகவே பெண்ணே! நீ வருந்தாதே’ எனக் கூறித் தேற்றிள்ை.

சனவன் செல்வான் கலங்காதே’ எனக் கண்ணிர் துடைத்து உறுதி உரைப்பதுபோல் கூறிய தோழி, கணவனைக் குறிப்பிடுங்கால், நின் காதலன்’ என்றாே, தின் அன்பன்’ என்றாே கூருமல், ஆளும் தன்மையுடையான்; கடமை ஆற்றப் பிறந்தவன் எனும் பொருள் தோற்றும் ஆடவர்’ என்ற சொல்லால் வழங்கியதாலும், தன்னக் குறிப்பிடுங்கால், மகளிர் என வாளா கூருது, கணவளுேடு இருந்து காதல் இன்பம் துய்ப்பதுமட்டும் போதாது; மன யின் கண் இருந்து மனையறம் ஆற்றுவதே மணந்த மகளிர்க்கு மாண்பாம் என்பதை உணர்த்தும் வகையில், மண்முறை: