பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i s

அது அவ்வாறு காதல் உணர்வு அற்றுக் கிடப்பதைக் கண்டும். அக் காளை, அதன் மீது காதல் கொண்டு கருத்திழந்து நிற் கிறது; காதல் வெறி கொண்டுவிட்டமையால், பெரு நிழல் தரும் மரங்களைத் தேடிச் செல்ல வேண்டும் என எண்ணுமல், அப்பசுவைக் கண்டு மகிழும் அண்மையில் கிடப்பது புல்லிய நிழல் தரும் உகாய் மரமேயாயினும், அதுவே போதும் என எண்ணி அமைதி காணுகிறது; அன்பு: அக்காட்டு விலங்கு களின் வாழ்க்கை முறையோடு முற்றிலும் முரண்பட்ட வாழ்க்கை முறைகளை வழித்துணையாகக் கொண்டுள்ளீர்கள் நீயும் நின் மனேவியும்; இவள், அக்காட்டுப் பகபோல் காதல் உணர்வு அற்றுக் கிடக்கவில்லை; கணவன், இமைப்பொழுதும் தன்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும் என விரும்புகிறது இவன் காதல் வெறி, கணவன் பிரிவு முயற்சி அறிந்து பெரிதும் வருந்துகிருள்; நீ, அக் காட்டெருதுபோல் காதல் வெறி கொள்ளாது, கடமை வேறி மிகுந்து பிரிந்து போகத் துடித்துக் கொண்டுள்ளாய், கடமையுணர்வு மிக்கமையால் காதலியோடு கலந்து வாழும் வாழ்வு வறுமை மிக்க வாழ்வே யாயினும், அதுவே இன்பம் கொழி கும் இனிய வாழ்வாம் என்பதை உணரமாட்டாது, வறுமையை வெறுத்துப் பெரும் பொருள் வேட்கை கொண்டு அல்கிருப்.

அன்: இயற்கை முறைக்கு ஒவ்வாத, அம்முறையோடு முற்றிலும் முரண்பட்ட செயல் மேற்கொண்டு செல்லும் நீ, இடைவழியில், இயற்கை முறையின் இனிமையை அக்காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறை எடுத்துக்காட்டக் கருத்துட் கொண்டு கலங்குவை அல்லையோ? காதலைக் கைவிட்டுக் கடமை மேற்கொண்டு வந்தது, மடயையாம் என அறிந்து மனந்துயர் கொள்வை அல்லையோ? அக்காட்சியைக் கண்டும், கண்டு உணர்வு பெற்ற பின்னரும், பொருள் தேடிப் போதல் உன்றால் இயலுமோ? இயலுமாயினும் அது உலகியல் ஆமோ? உலகியலோடு ஒப்ப முடிந்ததாயினும் அதில் இன்பம் காணல் இயலுமோ? பெரும்! எல்லாவற்றையும் எண்ணி முடிவு செய்க” எனக் கூறி, அவன் அந்நிலையில் பிரிந்து