பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$45

கானம் கார் எனக் கூறினும் யாருே தேறேன்; அவர்பொய் வழங்கலரே.” ,

பிணையைப் பிரிந்த கலேயைக் காணுர்:

கணவன் நட்பு கருகாது; காதன் பொய்யுரையான் என் றெல்லாம் கூறி உறுதியுடையாள் போல் காட்டிக் கொண்ட பிறகும், தோழி அடங்கினவளாகத் தோன்ற வில்லை. அவன் அளித்துச் சென்ற வாக்குறுதியை அவள் நம்பினவளாகத் தோன்றவில்லை. “அவன் அன்பு ஆழமானது; அவன் உரை அழியா உறுதி வாய்ந்தது என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும்; ஆனால், அதைப்போலவே, அவன் கடமை யுணர்வும் அசைக்கலாகா உரம் வாய்ந்த நாடும். கடமை நெறி நிற்கும் கடப்பாட்டாளன் அவன்; கடமை மேற் கொண்டிருக்கும் காலத்தில், மனைவியை நினேந்து கொள்ளு தல் கூடாது. மனேவிழைவாரி மாண் பயன் எய்தார்; கிழவி நிலையே வினேயிடத்து உரை யார்’ என்ற உலகியல் வழி நிற்பவன் அவன்; அதனுல், காதலியின் நினைவு, அவனுக்கு ஆங்கு உண்டாகாது; அது உண்டாளுல் அல்லவோ, நட்பையும், நவின்று வந்த ஆணையையும் நினைந்து விரைந்து வருதல் இயலும்; அந் தினேவுதான் அவனுக்கு உண்டாகாதே; அந்நினேவை அவனுக்கு ஊட்டு வாரும் ஆங்கு ஒருவரும் இேைர; உண்மை நிலை இதுவாகவும், கணவன் தட்பு கருகாது, காதலன் பொய்யுரையான் என்று நம்பி இப்பேதைப் பெண் ஏமாறுகின்றனளே! இத்தகை யாளை எவ்வாறு பேணிக்காப்பேன்’ என்றைல்லாம் எண்ணி இடருறுவாள்போல் தோன்றினள். தோழி.

2 குறுந்தொகை : 21. ஓதலாந்தையார். படமொய்க்கும்படி; த ைதந்த-அடர்ந்த கொடி இனர். நீன்ட மலர்க் கொதது: புனே..செய்த இழை. அணி (ஒரு வகைத் தலையணி) கதுப்பில்-கூந்தல்போல், தேறேன்-ஏற்றுக் கொள்ளேன்; வழங்கலர்-கூருர், கொன்றைக் கானம்கொன்றை மரத்தை உடைய காடு.