பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

கடமையின் சிறப்பை அவருக்கு உணர்த்தவல்ல காட்சிகள் சில ஆவர் கண்முன் தோன்றி அவர் தடுமாற்றத்தைப் போக்கிவிடும்; கடமையுணர்வூட்டும் காட்சிகள் அவர் சேல் லும் வழியில் நிறைய உள. இவற்றைக் காண அவர் தருைர், பெண்ணே! அவரைக் காட்டுவழியில் கண்டுவந்த சிலர், அவர் ஆங்குக்கண்ட காட்சியொன்றை எனக்குக் கூறிஞர்கள். காட்டுவழியைக் கடந்து சென்றுகொண்டிருந்த நம் தலைவர், இடைவழியில் ஒரு பெரிய யானைக் கூட்டம் தம் எத்ரே ருே வதைக் கண் டாராம்: அக்கூட்டம் தம்மை அணுகியக்கால், அவ்யானேகள் உணவு கண்டு பல நாள் ஆயின்; அதஞல் பசி நோய் படுத்தும் துன் பத்தால் தளர்ந்துள்ளன; நடக்கும் ஆற்றலையும் இழந்து தள்ளாடித் தள்ளாடித் தளர்கின்றன என்பதைக் கண்டு அவற்றின் நிலேக்கு இரங்கிக் கண்ணிர் விட்டாராம்; அவ்வாறு கலங்கி நின்ற அவர், அந்த யானைக் கூட்டத்தினிடையே, அவற்றிற்குத் தலைமை தாங்கிச் செல் லும் ஒரு பெரிய களிறு இருப்பதையும் கண்டாராம். நனி மிக நீண்ட அதன் கோடுகள், அதன் ஆண்மையைப் புலப்படுத் தினவாம். அதன் பார்வையில் ஓர் உறுதி தென்பட்டதாம். அவர் அதன் வடிவழகைப் பார்த்து வியந்து கொண்டிருக் கையில், அது, வழியில் வானுறவளர்ந்து நின்ற யாமரம் ஒன்றை அணுகிற்றாம் வயிரம் பாய்ந்து வன்மையுற்றுக் கிடந் ததாம் அம்மரம், தன் இனம்படும் பசிக்கொடுமை, அம்மரதி தின் வன்மைகண்டு அஞ்சுவதைத் தடுத்துவிட்டது போலும்! அக்களிறு தன் ஆற்றல் ஆனத்தையும் கொண்டு, அம்மரத் தின் அடியைத் தன்கோடுகளால் பலமுறை குத்திற்றாம்; கோடுகளின் கூர்மைக்கு ஆற்றாது அம்மரம் அடியற் றுச் சாய்ந்ததாம்; சாய்ந்து வீழ்ந்த அம்மரத்தின் பெரிய கிளைகளைத் தன் நீண்ட துதிக்கையால் முறித் துக் கோடுகளுக்கிடையே தாங்கிக் கொணர்ந்து, பசித்துயர் பொறுக்க மாட்டாமையால், தன்பின் விரைந்து வரவும் மாட்டாது மெல்ல மெல்லத் தளர்நடையிட்டு நகர்ந்துவரும் அவ்யானைகளுக்கு அளித்து, அவை அம்மரவுணவு உண்டு