பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

யால் அவர் குடிநிலை உயர்ந்தது. குடிநிலை உயரவே கோன்நிலையும் உயர்ந்தது. தமிழ்நாடு, உலக நாடுகள் அனைத்திலும் உயர்ந்து விளங்கிற்று. இவ்வாறு தம் நாட்டிை. உலக மன்றத்தின் உயர்ந்த அரியணையில் இருக்கச் செய்தவர் கணவனும் மனைவியுமாய்க் கூடிக் குடியோம்பி வாழ்ந்தோரே யாதலின், அறிவும், ஒழுக்கமும், காதலும், கடமையும் குன் ரு அவர் வாழ்க்கை வனப்பினே அறிந்து பயன்கொள் வோமாக.

தளரினும் மெல்லியள், தழுவுதற்கு இனியள்

இகளஞன் ஒருவன் ஒரு பெண்ணைக்கண்டு காதல் கொண் டான். அவள் ஓர் அழகி, ஒரு பெண்ணிற்கு உடலுறுப்புக் கள் அனைத்தும் ஒருங்கே அழகுடையவாய் அமைதல் வேண் டும்; அவற்றுள் ஒன்று அழகாய் அமைய ஏனேய அழகிழந்து போக வாழ்வாள் ஒருத்தியைக்காட்டிலும், கண்ணும் கையும் பல்லும் முதலாம் உறுப்புக்கள் ஒவ்வொன்றும், ஒன்றைப் போலவே அழகுடையவாக வாழ்வாள் ஒருத்தியே, உலக மக்கள் அனைவராலும், அழகி என ஒரு முகமாகப் பாராட்டுப்பெறுவள். அத்தகைய பேரழகி அப்பெண்.

காந்தள், மலைநாட்டு மலராதலின், மலைநாட்டு மகளிர் காந்தள் மலரைப் பெரிதும் விரும்புவதில்லை. அவர்க்குக் காட் டில் மலரும் முல் ைஇடத்தும், வயல்களில் மலரும் குவளையிடத்தும் பேராசை பிறக்கும். அதைப் போலவே, காட்டு நாட்டில் வாழும் மகளிர், தம் நாட்டு முல்லை மலரி னும், காந்தள் மலரையும், குவளை மலரையும் மிகுதியாக விரும்புவதும், மருதநிலத்து மகளிர், தம் நாட்டுக் குவளை மலரினும், காந்தளையும், முல்ைையயும் விரும்புவதும் இயல் பாம். மகளிர் மன இயல்பு இது. அதனல், அம்மலர்களைத் தனித்தனியே தொடுப்பின், ஒருவர் விரும்பும் மாலையை ஒருவர் விரும்பார்; அம்மூவரும் ஒருமனப்பட்டு, ஒரு மாலை பிடத்தே விருப்பம் கொள்ளவேண்டுமாயின், அம்மாலை, அம்