பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#47

மகிழக்கண்டு அதுவும் மகிழ்ந்ததாம். அக்காட்சியை, பெண்ணே! அவரும் கண்டாராம்,

தன்னினும் அறிவில் குறைந்த ஓர் உயிர், தன் இனத்தின் பசித்துயர் போக்கித் துணைபுரிதல் தன் கடன் என உணர்ந்து, அக்கடமையை வழுவாது ஆற்றியதைக் கண்ட நம் காதலர், தம் கடமையில் தவறுவரோ அவர், அக் களிறு நினேவூட்டிய கடமையுணர்வே, தம் கண் முன்னே நின்று காட்சி தர, காட்டைக் கடிதின் கடந்துசென்று, விரைந்து வினே முடித்துக்கொண்டு வீடு திரும்புவர்; ஆகவே, காதல் வெறியால் கடமையைக் கைவிடுவரோ என்ற கவலை உனக்கு வேண்டாம்” எனக் கூறித் தேற்றினுள்.

பொத்துஇல் காழ, அத்த யாஅத்துப் பொரியரை முழுமுதல் உருவக் குத்தி மறங்கெழு தடக்கையின் வாங்கி, உயங்குகடைச் சிறுகண் பெருகிரை உறுபசி தீர்க்கும் தடமருப்பு யானை கண்டனர், தோழி! தங்கடன் இlஇயர் எண்ணி, இடங்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய காம் வெங்காதலர் சென்ற ஆறே. .

a குறுந்தொகை: 235. கடுகு பெருந்தேவனர். பொத்து இல்-புரை இல்லாத காழ-வயிரம் பாய்ந்த; அத்த-வழியின் கண் உள்ள யாத்து-யாமரத்தின் முதல். அடிமரம், உயங்கு-வருந்திய இறீஇயர்-நிறைவேற்றும் பொருட்டு இடந்தொறும்-வாய்க்கும் இடற் தோறும்; காதலர் கண்டனர் என மாற்றுக.