பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48

யாண்டுளர் கொல்லோ!

வினை முடிந்த பின்னரே-வினேயில் வெற்றி கண்ட பின் னரே...மனேயறம் இனிது நடைபெறுவதற்கு வேண்டிய மாநிதியை சட்டிய பின்னரே கணவன் விடுதிரும்புதல் வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டிய அப்பெண், அவன் மேற்கொண்ட பணியில் பன்னெடும் நாட்களைப் பாழாக்கி விடுதல் கூடாது; வினேயை விரைந்து முடித்துக்கொண்டு வீடடைதல் வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டினுள்; வருவேன் என வாக்களித்துச் சென்ற நாளிற்கு முன்பாகவே வந்து சேர்தல் வேண்டும் என விரும்பிளுள். அதனுல் அவன் வருகையை ஒவ்வொரு நாளிலும் எதிர்நோக்கிளை நாளேக் காலே வந்துவிடுவர் எனும் நினைவோடு கண்மூடுவாள்; பொழுது விடிந்ததும் விடியாததுமாய் வாயிற்கண் சென்று வழிநோக்கி நிற்பாள்: காயுைம் கழிந்துவிடும்; அவன் வாரான்; அவள் வருத்தம் மிகும்; “காலையில் வந்த்லர்; ஆயிலும் மாtலயில் அவர் வருகை தவருது” எனத் தேறி மனை புகுவள்; பகல் கழிவைப் பார்த்துக் கொண்டேயிருப்பள்; மாலை வந்துற்றதும் மனப்புறம் போயிருந்து அவன் வரு கையை எதிர் நோக்குவள்; மாலே கழியும்; இரவும் வந்து சேரும்; அவன் வாரன்; மீண்டும் மனம்வருத்தத்தில் ஆழும்: வாய்மட்டும் ‘இன்று வந்திலா; நாளைக்கால நில்லார்’ என உரைக்கும்; அந்நம்பிக்கையோடு உட்செல்வள்; இவ்வாறு நாட்கள் கழிந்துகொண்டே போயின; அவன் குறித்துச் சென்ற நாளும் கழிந்துவிட்டது; அவன் வந்திலன்; அவள் கவலை மிகுந்தது; துன்பம், அவளைத் துணையெனப் பற்றிக்கொண்டது; அந்நிலையில், அவள் கண்முன் தோன்றும் சில காட்சிகள், கடமையை எண்ணிக் கணவன் பிரிவுத் துயரை ஒருவாறு தாங்கிக்கொள்ள நினைக்கும் நினைப்பை அழித்துப் பிரிந்துறை வாழ்வால் வந்தடையும் துயரைத் துன்டி மேலும் வளர்க்கத் துணை புரிந்தன.

அவள் மனேயில், பேடையும் சேவலுமாகி இருபுருக் கள் இறப்பில் கூடுகட்டி வாழ்ந்திருந்தன; பிரிவறியாப்