பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

பேரின்ப வாழ்வு பெற்று வாழ்ந்த அவற்றுள் ஆண்புரு, தன் பெடை தன்னை விட்டுச் கிறிது பொழுது பிரிய நேரி னும்-சிறிது தூரம் பிரிந்து செல்லக் காணினும் பொறுக் காது; அச்சிறு பிரிவையும் அதல்ை தாங்கிக்கொள்ள இயலாது போலும்! அதனால் அவ்வாறு பிரிய நேரின் உடனே பலகால் கூவிக் கூவி அழைத்து, அதை நெருங்க அடைந்து பேரின்பம் காணத் துடிக்கும்; புருக்களின் இவ்வின்ப வாழ்க்கை, அவள் இன்ப வேட்கையைத் தூண்டிவிட்டு அவளைத் துயர்க்கு உள்ளாக்கிற்று; அவள் பெரிதும் வருந்தி ளுள். பேட்டினேப் பிரிய விரும்பாது அதன் பின் திரிந்து பேரின்பம் நுகரும் இச்சேவற் புருவின் சிறந்த காதல் உணர்வு என் கணவர்பால் வாய்க்கவில்ேைய” என எண்ணி வருந்தினுள்; கிறிது கழித்து, “அவர் மீது குறை கூறிப் பயன் இல்லை; பொருள் தேடிப்போயிருக்கும் அவருக்கு, ஆங்கே காதல் நினேவூட்டுவார் எவரும் இலர் எவ் வுயிரும் இல்லை. அவர் கண்முன் காதல் களியாட்டம் புரிந்து, அவர் கருத்தில் காதல் வெறியூட்டவல்ல நிகழ்ச்சி எதுவும் ஆங்கு நிகழ்வதில்லை. மாருக, கடமையின் சிறப்பை எடுத்துக் காட்டவல்ல நிகழ்ச்சிகள் அல்லவோ, ஆங்கு நிறைய நிகழ்கின்றன. தனக்கும் தன் பெடைக்கும் வேண்டும் ஊன் உணவு பெறும் உறுதி பூண்டமையால், பெடையைக் கூட்டில் விடுத்துத் தனியே பறந்துவந்து, தான் விரும்பும் ஊன் எங்கேனும் கிடைக்காதா என்ற ஏக்கம் நிறைந்த அண்களால் அம்மல்நாடு அனைத்தையும் உற்று நோக்குமாறு, உயர்ந்த ஞெமை மரத்தின் உச்சிக் கிளைகளில் உட்கார்ந்திருக்கும் சேவற்பருந்தின் காட்சியன்றாே, ஆங்கு அவர் கண்களில் படுகிறது; அதைக் காணும் அவர், o, அக் காட்சி, மாநிதி சேர்க்கும் நினைவால் மனைவியைப் பிரிந்து வந்து, காட்டுவழியைத் தனித்துக் கடக்கும் தன் செயல் சாலவும் பொருந்தும் என்பதற்குச் சான்று பகர்வதாக அல்லவோ அவர் கருதுவர்; அக்கருத் துடையார் உள்ளத் தில் காதல் உணர்வு எங்கே எழப்போகிறது? ஆவர். எங்கே

கு-11 -