பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

காலத்தில் வந்து என் கண்ணிரைத் துடைக்கப் போகிறார்’ என எண்ணிக் கலக்கமுற்றாள்.

காட்டுவழி, பெடையும் சேவலும் பிரியாது வாழும் துணைப் பறவைகளைப் பெருது, ஊன் தேடி அலையும் தனிப் பறவை ஒன்றைமட்டும் பெற்றிருப்பதே கணவன் விரைந்து மீளாமைக்குக் காரணமாம் எனக் கூறி, கணவன் செயலில் குறை காணுள்போல் கூறினுளாயினும், துணையொடு வாழும் பறவைகளைப் பாராட்டியும், ஊன் தேடித் திரியும் ஒற்றைப் பருந்தைப் பழித்தும் உரைக்கும் அவள் உள்ளம், மனேயில் மனைவியோடிருந்து மகிழ்ந்து வாழ்வாரே மாண்புடையவர்; அவளே வருந்த விடுத்துத் தனித்துப் போய்ப் பொருள் தேடித் திரிவார் பாராட்டத் தக்க பன் புடையாரல்லர்; பழிக்கத் தக்கார் எனக் கூருமல் கூறி, அவன் குறைகண்டு கலங்கிற்று.

கலங்கிய தன் உள்ளத்தை, தன் அண்மையில் இருக்கும் தோழிக்குத் திறந்து காட்டிக் கண்ணிர் சொரிந்தாள்.

வைகல் வைகல் வைகவும் வாரார்; எல்லா எல்லே எல்லையும் தோன்றார், யாண்டுளர் கொல்லோ ? தோழி! ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே, பல்லூழ் புன்புறப் பெடையொடு பயிரி இன்புறவு இமைக்கண் ஏதாகின்றாே ஞெமைத்தலை ஊன் நசைஇ, ஒரு பருந்து இருக்கு வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.” 2

குறுந்தொகை: 285, பூதத் தேவனர்.

வைகல்.நாள்தோறும்; வைகல்-விடியற்காலம்; வைகவும் நீங்கவும்; எல்.ைபகற்காலத்தின்; எல்லை-எல்லையாகிய இரவு; பல்லூழ்-பலமுறை, உயிரி.கூவி அழைத்து; இமைக் கண்இமைப்பொழுதில் ஞெமைத்த.ைஞெமை மரத்து உச்சிக் கண், நசைஇ.விரும்பி; இறந்தோர்-கடந்து செல்வோர் .