பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 5

கண்டு சிரிக்கிறதே கார் :

காதலன் வருகையை எதிர்நோக்கி மனப்புறத்தே காத்துக் கிடந்தாள் அப்பெண். அந்நிலையில் கார் காலத்து மழைத்துளி அவள் மேனியில் வீழ்ந்து தெறித்தது. கார் காலம் வந்திலது, ஆகவே காதலர் வந்திலர்; அது வந்ததும் வந்துவிடுவர் என்ற எண்ணத்தால் ஒரளவு உயிர் காத்து வந்தாள் அவள். இப்போது கார்காலத்து மழைத்துளி அவள் மேனியில் படவே, அந்நம்பிக்கையும் அழிந்துவிட்டது. அந்நம்பிக்கை இழந்து போன பின்னரும் உயிர் வாழ்ந்திருக் கும் தன் நிலை கண்டு உலகமே கிரிப்பதுபோல் தோன்றிற்று அவளுக்கு, கலைமான், பருக்கைக் கற்கள் படிந்த பள்ளங் களில் தேங்கி நிற்கும் கார் காலத்து மழைநீரின் தெளிவைக் குடித்துக் களை தீர்ந்து, தன் உயிரிக்கு இன்பம் ஊட்டும் பெண் மாளுேடு, காட்டிலும், கானதிறங்கரையிலும் துள்ளி விளே யாடுமாறு, கார்காலம் வந்துவிட்டது, காட்டு விலங்குகள், இவ்வாறு, தம் அன்புத் துணைகளோடு இன்ப வாழ்வு பெற்று வாழ் தற்காம் காலம் வாய்க்கவும், நாட்டில் வாழும் நல் கோர்க்கு அவ்வுணர்வு வாய்க்கவில்லேயே, வீட்டில் விட்டுவந்த காதலியர், கார் காலக் காட்சிகளைக் கண்டு கண்ணிர் சொரி வரே; விரைந்து வீடடைந்து அவர்க்கு வற்றாப் பேரின் பத்தை வாரி வழங்கவேண்டுமே என்ற உணர்வு கணவன்மார்க்கு வாய்க்கவில்லை; அவர்கள் அத்தகைய கொடியராதை அறிந்தும், இறந்துபோக எண்ணுது, அவர்கள் வருகைக்காக ஏங்கி, வருந்தி வாழ்கின்ற இப்பேதைப் பெண்களே என் னென்பது என்று, பொதுவாகப் பெண்குலம் முழுமையுமே எள்ளி நகைப்பதுபோல் தோன்றும் அக்காாகாலம், பெண்ணே காட்டு விலங்குகள் கரைகானப் பேரின் பவாழ் வில் மிதக்கும் இக்காலத்திலும் வாராத-வரவேண்டும் என்ற கருத்திராத .காதலன் வரவை எதிர்நோக்கி, அவ்வேகத்தால் ஆகும் வருத்தத்தைத் தாங்கிக்கொள்வதற்காகவே, நீ இன் னமும் உயிர்கொண்டு வாழ்கின்றன போலும் என்று, தன்ன நேர் நின்று எள்ளி நகைப்பதுபோல் தோன்றவே,