பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

காலம் மாறக் கருத்தும் மாறும்; இதை உணர்ந்து உள்ளம் தேறியிருப்பதே உயர்ந்தோர்க்கு அழகு;அதைவிடுத்து, நான், இன்றும் உன் துணையாதல் வேண்டும் என்பதோ, உன் காதலர், இப்போதும் உல் அருகில் இருக்கவேண்டும் என்ப தோ அறிவுடைமையாகாது; உன்னுல் வளர்த்துவிடப்பட்ட எனக்குள்ள இவ்வறிவு தானும்,உனக்கு உண்டாகவில்லையே; என்னே நின் பேதைமை!” என்று கூறி நகைப்பதுபோல் தோன்றவே; நாணத்தால், அவள் த&மீண்டும் தாழ்ந்துவிட் டது. தோழியை அழைத்துக் கார்காலத்து மழைநீரும் முல்லை மலரும் செய்யும் கொடுமையைக் கூறிக் கலங்கிள்ை.

‘வன்பரல் தெள் அறல் பருகிய இரலை, தன் இன்புறு துணையோடு மறுவந்து உகளத், தான் வந்தன்றே தளிதரு தண்கார்; வாராது உறையுநர் வரல் நசைஇ, வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.’

“இளமை பாரார் வளம் நசைஇச் சென்றாேள்:

இவனும் வாரார்; எவணரோ? எனப் பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுறை இலங்கு எயிருக நகுமே, தோழி! நறும் தண்காரே. 6

குறுந்தொகை : 65. கோவூர் கிழார். பரல் - பருக்கைக் கற்கள்; தெள் அறல்.தெளிந்த நீர்; இர ை- ஆன்மான்; மறுவந்து - மகிழ்ச்சியால் அலைந்து, உகள - துள்ளி விளையாட, நகைஇ. விரும்பி; உறைய-வாழ: இருந்திரோ - உயிர் வாழ்கின்றனயோ, தளி - மழைத்துளி.

b குறுந்தொகை: 126, ஒக்கூர் மாசாத்தியார். வளம் - செல்வம், நசைஇ- விரும்பி; இவன் . இவ்விடம் அல்லது இக்காலம்; எவணரோ. எவ்விடத்தில் உள்ளாரோ: பெயல் - மழை, புறம் தந்த-வளர்த்து விட்ட தொகு - நிறைந்த முகை.அரும்புகள்; இலங்கு-விளங்கு எயிருகபுற்களாக, -