பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

மூவகை மலரும் விரவித் தொடுக்கப்பெற்ற மாலையாதல் வேண்டும். மேலும் செந்நிறக் காந்தள், வெண்ணிற முல்லை, கருநிறக் குவளை இம்மலர்களைத் தனித்தனியே தொடுத்துக் காணும் அழகினும், அவை மூன்றையும் ஒன்றை யடுத்து ஒன்று இருக்குமாறு விரவித்தொடுத்த மாலை, கண்ணைப் பறிக்கும் பேரழகும். நிறங்கலந்து தோன்றும் அக்காட்சியழகோடு, நல்ல பல நறுமணங்களும் ஒன்று கலந்துவிடின், அம்மலர் மாலையின் மாண்பினை, மனத்தால் நினைந்து நினைந்து மகிழ்வதல்லது, வாயால் வரைந்து கூறுதல் இயலாது. மேலும், அப்பன்னிற மலர்களைத் தொடுக்கும் தொழில்வல்ல ஒருவன், தன் கைவண்ணமெல் லாம் காட்டித் தொடுப்பின், அம்மாலையின் அழகும் மாண் பும், மேலும் பன்மடங்கு அதிகமாம்; அழகிய அம்மலர் மாலை போன்றவள் அவள்.

அவள் கை, காந்தள்; அவள் பற்கள், முல்லை முகை; அவள் கண், குவளை இவ்வாறு அவள் நல்ல அழகியாத லோடு, நல்ல பல இயல்பும் உடையவள்; அந்நல்லோள் மேனி, நனிமிக மென்மை வாய்ந்தது. நிறத்திலும் மென்மை யிலும், மாவின் இளந்தளிரை வென்றது அவள் மேனி; காதல் கொண்டு அணைவார் உள்ளத்தை இன்பக் கடலுள் ஆழ்த்தும் அத்துணை அருமை வாய்ந்தது அம்மேணி. அவள் இத்தகைய பேரழகுடையவளாகவே, அவளைக் கண்ட இளைஞன் உள்ளம், அவளழகிற்கு அடிபணிந்து விட்டது; உணர்விழந்த நிலையில், அவள் உருவு நலனையே பன்னிப்

பன்னிப் பாராட்டத் தொடங்கி விட்டான் இளைஞன்.

கோடல் எதிர்முகைப், பசுவீ முல்லை, காறுஇதழ்க் குவளையொடு இடைப்பட விசைஇ, ஐது தொடைமாண்ட கோதை போல