பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?

யாமை; தன் மடமையை மயில்கள் மீது ஏற்றிக்கூறும் இவள் மனப்போக் இன என்னென்:ேன் என எண்ணி நகைத்தாள் அப்பெண்.

புதுமழை பெய்தல், மயிலினம் ஆடுதல், பிடா மலரிதல் இவற்றாேடு நின்றிருந்தால் தோழி கூறுவது ஒருகால் உண் மையாகவும் இருக்கலாம்; ஆனல் இயற்கை நிகழ்ச்சிகள் அவற்றாேடு நின்றுவிட வில்லையே; கொன்றை மலர்ந்து விட்டது; செல்வர் வீட்டுச் சிருர்களின் சின்னம் சிறு கால் களில், தவளையின் வாய்போல் திறந்த வாயுடையவாய், பொன்னல் பண்ணிப் பூட்டப்பெறும் கிண்கிணியணி போலும் வடிவும் வண்ணமும் வாய்ந்த அக்கொன்றை மலர்க் காட்சிகள் கண்களைப் பறிக்கின்றனவே; அக் கொன்றையோடு நிற்கவில்லையே; குருந்த மரம் வேறு கொத்துக் கொத்தாய் மலர்ந்துமணக்கிறதே, ஆடும்காற்றால் அலைப்புண்டு அசையும் அம்மலர்க் காட்சிகள் அழகை அள்ளி அள்ளிச் சொரிகின்றனவே; இவற்றையும் அம்மயில்களின் அறியாமையின் விளைவு எனக் கொள்வது அறிவுடைமை ஆமோ? ஆகாது.

ஆகவே, கார்காலம் பிறந்துவிட்டது என்பதை உறுதி யாக உணர்ந்துகொண்டாள் அப்பென்; தான் முன் கண்ட கார்காலக் காட்சிகள், தோழி கூறியவாறு மயிலினத்தின் மடமையின் விளைவுதாமோ என்ற ஐயம் அகன்றுவிட்டது; அதனல் “காரிகாலம் தொடங்கவில்லை; கலங்காதே; கணவன் உரை பொய்யாகாது; கவலை கொள்ளாதே’ எனக் கூறிய தோழியைக் கூட்டிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள். ஆங்கு மலர்ந்து மணம் வீசும் கொன்றை குருந் துகளைக் காட்டினள். அம்மலர்களின் வடிவழகை, அவற்றின் மண நலத்தை, அவை காற்றால் அலைப்புண்டு ஆடி அசை வதை அவள் கண்ணும் கருத்தும் உணருமாறு காட்டினுள்; காட்டிவிட்டு “தோழி! இவற்றைக் கண்டும் கார்காலம் இன்னமும் தோன்றவில்லை என்று கருதுகின்றனயோ? இவை யும் அம்மயிலின் மடமையின் விளைவுதாமோ? காரிகாலம்