பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

அாகத் தோன்றிற்று அதன் மேனி, அது தன் கூட்டிை விட்டுப் பறந்து வந்து தெருவை அடைந்தது: அதைத் தொடர்ந்து அதன் ப்ேடும், அதன் குஞ்சுகளும் பறந்து வந்து தெருவை அடைந்தன; தெருவில் மனைகளின் முன்புறத்தில் மகளிர் காய விட்டுக் காத்துக் கிடக்கும் பல்வேறு வகையான உணவுப் பண்டங்களில் படிந்து வயிருர உண்டன; உண்டு உடற்பசி நீங்கிய பின்னர், அவை, ஊர் மக்கள் ஒன்று கூடி ஆடியும் பாடியும் மகிழும் மன்றத்தை அடைந்தனர்; ஆங்கே குவியல் குவியலாகக் கொட்டி வைத்துள்ள எருக்குப் பைகளைக் குடைந்து குடைந்து ஆடி மகிழ்ந்தன; அந்நில யில் மாலை மறைய இருள் பரவத் தொடங்கிவிட்டது. உடனே அனைத்தும் ஒன்று கூடித் தம் கூட்டினை அடைந்து மகிழ்ந்தன.

அழகிய இக் காட்சியை அவள் கண்டாள்; சிறிது பொழுது தன் கவலையை மறந்து மகிழ்ந்தாள்; அக்காட்சி முடிவு அவளை மீண்டும் துயரக்கடலில் தள்ளிவிட்டது; அக் குருவிகளின் இன்ப விளையாட்டைக் காண்பதில் தன் துன் பத்தை மறந்திருந்த அவள், அவை கூடுகளே அடைந்து மறைந்து போனதும் தன் நினைவு வரப்பெற்றாள்; அந்நிலையில் காதலனேக் காணுக் கலக்கத்தோடு மற்றாெரு கலக்கமும் சேர்ந்து கொண்டு அவளைத் துன்புறுத்தத் தலைப்பட்டது.

“இக்குருவி இனத்தைப்போல் காதலளுேடு பிரியாது வாழ்ந்து, அறிவறிந்த மக்களைப்பெறும் அரும் பெரும் பேறு பெற்று, அம்மக்களோடும் ஒக்கலோடும் மகிழ்ந்து வாழும் வாழ்வு எனச்கும் வாய்க்காதா” என எண்ணி ஏங்கிற்று அவள் உள்ளம். ஏக்கம் மிக்க அவள் தன் தோழியை அணு கிள்ை; தெருவில் தான் கண்ட அவ்வின்பக் காட்சியை அவளுக்குக் கூறின : அக்காட்சியைக் கண்டு தன் உள்ளத் தில் எழுந்த இன்ப வேட்கையை எடுத்து இயம்பினுள்: பின்னா, தோழி! இவைபோலும் எண்ணற்ற ஆசைகளைக் கிளப்பிவிடும் இவைபோலும் மாலைக் காட்சிகள் நம் கணவர் சென்ற நாட்டில் நிகழாவோ? அவற்றை அவர் காணுரோ?