பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கண்டிருப்பாராயின் அவரும் என்னைப்போல் அவ்வின்ப வாழ் விற்கு ஏங்கி, இந்நேரம் இவண் வந்து அடைந்திருப்பரே, அல்லது, அவற்றைக் கண்டும், அவர் கடமையுள்ளம் கலங்க வில்ேையா? அதஞல் அவர் வருகை தடைபட்டுளதோ? தோழி! வாய் திறந்து எனக்கு விளங்கக் கூறு” எனத் தன் உள்ளக் குமுறஇ அவள் உணரக் காட்டிக் கலங்கி நின்றாள்.

“ ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனஉறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து எருவின் நுண்தாது குடைவன ஆடி இல்இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும் இன்று கொல் தோழி! அவர் சென்ற காட்டே, !

என் அழகு எனக்கும் ஆகாது; என்னைக்கும்

உதவாது கொல்?

கணவன் வாக்களித்துச் சென்ற காலம் கடந்து போக வும் வந்திலனே என்ற ஏக்கத்தால் எழுந்த வருத்தம் அப் பெண்ணின் மனத்தைப்பற்றி வருத்த வருத்த, அவள் மேனி யும் தன் பொலிவிழந்து பசக்கத் தொடங்கிவிட்டது; நல்ல செம்பொன்னல் செதுக்கி வைத்த கிைேமீது மாலை ஞாயிற்று மஞ்சள் வெயில் வீழ்ந்தாற்போல் பேரொளி வீசும் பெருங் கவின் மிக்கது அவள் மேனி, அந்த அழகே அவளுக்கு, அவனைக் கணவகைக் கொண்டு தந்து துணைபுரிந்தது. அவன்

a குறுந்தொகை: 46. மாமலாடனர்.

சாம்பல்.வாடியமலர், கூம்பிய-குவிந்த; முன்றில். மக்னமுற்றம்; உணங்கல்.உலரவிட்ட உணவுப் பொருள்கள்; தாது-பொடி, குடைவன-குடைந்து; இல் இறை.வீட்டு இறப்பு: பள்ளி-கூடு; புன்கண்.துன்பம் மிக்க; புலம்பு. தனிமையுணர்வு.