பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

வால் அவள் தன் துயரை அடக்கிக் கொள்ளுதல் வேண்டும்; அந்நிலையில் அவள் துயர் கொண்டால், அவள் துயர்ப்படு கிருள் என்பதைப் போயிருக்கும் கணவன் கேட்டுவிட்டால், அவன் சென்ற வினையைச் சீரழிய விடுத்து வந்துவிடுவன்; அதளுல் உண்டாம் பழி அவளையே சாரும்; அதனால் அவள் துயர் கேட்டு, அவன்வறிதே வந்துவிடாதிருத்தற் பொருட்டு அவள் தன் துயரைப் பிறர் உணராவாறு அடக்கிக்கொள்ளு தல் வேண்டும்; அதுவே அறிவுடைமை என்பதை அவள் உணருமாறு எடுத்துக் கூறின், அவள், தான் துயர்படுவதால் தனக்கும் தன் கணவனுக்கும் நேரும் கேட்டிற்கு அஞ்சி அடங்கியிருப்பள் என எண்ணினுள்; அதனுல் அக்கருத்து அவள் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு கூற விரும்பினன்; ஆளுல் அந்நிலையில் தான் கூறும்சொற்கள் அறிவுரை வழங்கு வன் போல் தோன்றின், கருதிய பயன் விளையாது ஆதலின், அவளுக்கு ஆறுதல் உரைப்பனபோல் அவை தோன்றுதல் வேண்டும் என விரும்பினள்,

ஆணையிற் கிடந்து அழுது மடிவாள் அருகிற் சென்று, பெண்ணே பஞ்சணையிற் கிடந்தும் துஞ்சுதல் ஒழிந்து நீ நாள்தோறும் துயர் உறுகின்றன; உன்னை இவ்வாறு துயர் உறவிடுத்துவாளா இருந்து விடும் வன்னெஞ்சர் அல்லர் உன் கணவர். அவர் சிறந்த ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவே சென்றுள்ளார் என்பது உண்மை. ஆளுல் அவர் உன்னே மறந்து விடுவாரல்லர்; உன்னை மடியவிடுவாரல்லர்; நீ படும் துயர் அவருக்குத் தெரியாது; கணவன் சிறந்த பணி மேற் கொண்டு சென்றுளான் என்ற நினைப்பால் சிந்தை களித்தி ருப்பாள் மனைவி எனும் நினைவால், அவர் மேற்கொண்டு சென்றுள்ள பணியில் கருத்தைச் செலுத்தியுள்ளார். அதற்கு மாருக, நீ துயர் உறுகிறாய்; அதை அவர் அறிந்தால், அதை யாரேனும் அவர்பால் சென்று உரைத்தால், கேட்ட அக் அணமே தாம் செய்யும் வினையை, அது எத்துணைச் சிறந்த பயனேத் தருவதாயினும் கைவிட்டு, ஆங்கு கணப் பொழுதும் நில்லாது இவண் விரைந்துவந்து சேர்வர்; ஆகவே பெண்ணே!